- Advertisement -
ஐ.பி.எல்

இது வேறையா? 2025 ஐபிஎல் தொடரில் விளையாட இப்போதே ஹர்டிக் பாண்டியாவுக்கு தடை.. துரத்தும் சோகம்

ஐபிஎல் 2024 டி20 தொடரின் 67வது லீக் போட்டியில் மும்பையை 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ தோற்கடித்தது. வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ நிக்கோலஸ் பூரான் 75, கேப்டன் கேஎல் ராகுல் 55 ரன்கள் எடுத்த உதவியுடன் 215 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.

அதைத் துரத்திய மும்பைக்கு ரோஹித் சர்மா 68, நமன் திர் 62* ரன்கள் எடுத்தனர். ஆனால் கேப்டன் ஹர்டிக் பாண்டியா, சூரியகுமார் உள்ளிட்ட இதர வீரர்கள் பெரிய வீரர்கள் எடுக்கத் தவறியதால் 20 ஓவரில் 196/6 ரன்கள் மட்டுமே எடுத்த மும்பை பரிதாபமாக தோற்றது. அதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தாலும் லக்னோ ஆறுதல் வெற்றி பெற்றது.

- Advertisement -

பாண்டியாவுக்கு தடை:
மறுபுறம் எனவே முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறிய மும்பை ஆறுதல் வெற்றியை கூட பதிவு செய்யாமல் வீட்டுக்கு கிளம்பியது. இந்த வருடம் ரோகித் சர்மாவுக்கு பதிலாக புதிய கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா ஆரம்பம் முதலே பேட்டிங், பவுலிங் ஆகிய எதிலுமே தாக்கத்தை ஏற்படுத்தாமல் மும்பை அணியின் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அந்த வரிசையில் இப்போட்டியிலும் முக்கிய நேரத்தில் களமிறங்கிய அவர் 16 (13) ரன்களில் அவுட்டாகி ஃபினிஷிங் செய்யத் தவறியது தோல்வியை கொடுத்தது.

இந்நிலையில் லக்னோ மலணிக்கு எதிரான இப்போட்டியில் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. அத்துடன் ஏற்கனவே இந்த வருடம் 2 முறை மும்பை அணி இந்த தவறை செய்தது. அப்போது முதல் முறை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு மட்டும் அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம் 2வது முறை மொத்த மும்பை அணிக்கும் அபராதம் விதித்திருந்தது.

- Advertisement -

ஆனால் தற்போது 3வது முறையாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கத் தவறியதால் விதிமுறைப்படி மும்பை ஹர்திக் பாண்டியாவுக்கு ஒரு போட்டியில் விளையாட ஐபிஎல் நிர்வாகம் தடை விதித்துள்ளது. அத்துடன் இப்போட்டிக்கான சம்பளத்திலிருந்து 30% ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்படுவதாகவும் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இருப்பினும் தற்போது மும்பை அணியின் அனைத்து போட்டிகள் முடிந்து விட்டது.

இதையும் படிங்க: இந்த தொடர் முழுவதுமே தோத்து இப்படி நாங்க நிக்க காரணம் இதுதான் – ஹார்டிக் பாண்டியா பேட்டி

எனவே 2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை கேப்டனாக ஹர்திக் பாண்டியா விளையாட முடியாது. மொத்தத்தில் ஆரம்ப முதலே ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்க்கு மத்தியில் விளையாடிய பாண்டியா தலைமையில் 10 தோல்விகளை பதிவு செய்த மும்பை புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தை பிடித்துள்ளது. அந்த சோகக்கதை அடுத்த வருடமும் முதல் போட்டி வரை பாண்டியாவுக்கு நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -