தெ.ஆ அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்த இருவரில் ஒருத்தர் தான் கேப்டனாம் – விவரம் இதோ

Indian Team
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 26-ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரானது வரும் 29-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதனை தொடர்ந்து இந்திய அணி உடனடியாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க இருக்கிறது. ஜூன் 9 ஆம் தேதி துவங்கும் இந்த டி20 தொடரானது ஜூன் 17ஆம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதற்கான முறைப்படியான அட்டவணையும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

INDvsRSA

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணியை ஐபிஎல் தொடரை வைத்து தான் தேர்வு செய்வோம் என்று ஏற்கனவே பிசிசிஐ அறிவித்துள்ளதால் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், பும்ரா மற்றும் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட உள்ளது. இப்படி இந்திய அணியில் உள்ள பல சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட உள்ளதால் இளம் வீரர்களைக் கொண்ட அணி கட்டமைக்கப்படும் என்று தெரிகிறது.

Dhawan-Pandya

மேலும் இந்த தென்னாபிரிக்க அணிக்கெதிரான தொடரினை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாட அங்கு பயணிக்க உள்ளதால் சீனியர் வீரர்களுக்கு ஒருமாதம் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே இளம் வீரர்களை கொண்ட அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும்.

- Advertisement -

இந்த அணியில் இருந்து சீனியர் வீரர்கள் பலரும் வெளியேற்றப்பட உள்ளதால் இளம் வீரர்களை கொண்ட அணி எவ்வாறு தென்னாப்பிரிக்க அணியை சமாளிக்கப்போகிறது என்பதே தற்போது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது இந்த இளம் இந்திய அணியின் கேப்டனாக யார் செயல்படுவார்கள் என்று கேள்வி அனைவரது மத்தியிலும் இருந்து வருகிறது.

இதையும் படிங்க : அவர் மட்டும் இல்லனா சிஎஸ்கே வெறும் சாதா டீம் தான் – மீண்டும் ஒருமுறை நிரூபணம் (விவரம் இதோ)

இந்நிலையில் அதற்கு பதில் அளிக்கும் விதமாக தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதில் ரோகித் சர்மா இல்லாத நேரத்தில் ராகுல் கேப்டன் செய்து வந்தார். ஆனால் தற்போது ராகுலும் இந்த தொடரில் ஓய்வு எடுத்துள்ளதால் ஹர்டிக் பாண்டியா அல்லது தவான் ஆகிய இருவரில் ஒருவருக்கு இந்திய அணியின் கேப்டன் பதவி வழங்கப்படும் என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement