அவர் மட்டும் இல்லனா சிஎஸ்கே வெறும் சாதா டீம் தான் – மீண்டும் ஒருமுறை நிரூபணம் (விவரம் இதோ)

Raina
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சென்னைக்கு ஆரம்பம் முதலே பல குளறுபடிகளும் குழப்பங்களும் அடுத்தடுத்த தோல்விகளுக்கு முக்கிய பங்காற்றின. முதலில் 14 கோடிக்கு வாங்கிய தீபக் சாஹர் காயத்தால் ஆரம்பத்திலேயே விலகியது பந்துவீச்சு துறையை பலவீனப்படுத்தியது. அதைவிட 4 கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டனும் எம்எஸ் தோனி 40 வயதைக் கடந்த காரணத்தால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொடர் தொடங்க ஒருசில நாட்கள் முன்பாக கேப்டன்சிப் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். ஆனால் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவம் இல்லாத அவர் தலைமையில் 4 வரிசையான தோல்விகளை பெற்ற சென்னையின் பிளே ஆஃப் வாய்ப்பு அப்போதே 90% பறிபோனது.

CSK Ms DHoni

- Advertisement -

அதன்பின் பேட்டிங் பவுலிங் என மொத்தமாக கேப்டன்சிப் அழுத்ததால் சொதப்பிய ஜடேஜா அந்த பதவியே வேண்டாம் என்று மீண்டும் தோனியிடமே வழங்கினார். கேப்டனாக தோனி திரும்பியதும் ஒருசில பெரிய வெற்றிகளை பதிவு செய்த சென்னை அதிர்ஷ்டத்தின் உதவியுடன் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல 3% வாய்ப்பில் காத்திருந்தது.

2020 ரிட்டர்ன்ஸ்:
அந்த நிலைமையில் தனது 12-வது லீக் போட்டியில் வென்றால் அதிர்ஷ்டத்தின் உதவியுடன் பிளே ஆஃப் செல்லலாம் இல்லையேல் வெளியே செல்லலாம் என்ற சூழ்நிலையில் பரம எதிரியான மும்பையை எதிர்கொண்டது. வான்கடே மைதானத்தில் பவர்கட் சூழ்ச்சியுடன் நடந்த அப்போட்டியில் வெறும் 97 ரன்களுக்கு சுருண்ட சென்னை 5 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. அதனால் ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்றுடன் மும்பையைத் தொடர்ந்து 2-வது அணியாக அதிகாரபூர்வமாக வெளியேறிய சென்னை சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் வாய்ப்பையும் அதோடு பறிகொடுத்தது.

CSK MS Dhoni Ravindra Jadeja

ரெய்னா இல்லாத சிஎஸ்கே:
கடந்த 2008 முதல் ஒவ்வொரு வருடமும் எப்படியாவது பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும் என்று பெருமைக்கு சொந்தமாக சென்னை இருந்த நிலையில் கடந்த 2020 ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த போது திடீரென்று துபாய்க்கு மாற்றப்பட்டது. அந்த சூழ்நிலையில் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் இருக்க விரும்பவில்லை எனக்கூறி ஹர்பஜன்சிங் ஆரம்பத்திலேயே விலகினார். அதன்பின் துபாய் சென்ற எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை அணியிலிருந்து சமூக விரோதிகளால் தாக்குதலுக்கு உள்ளான தனது குடும்பத்தினரை நேரில் பார்ப்பதற்காக திடீரென்று தொடர் தொடங்குவதற்கு முன்பாக அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சுரேஷ் ரெய்னா வெளியேறினார்.

- Advertisement -

அது அந்த அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியபோது எஞ்சியிருந்த வீரர்களும் சரியாக செயல்படாத காரணத்தால் வரலாற்றிலேயே முதல் முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் சென்னை பெருத்த அவமானத்தை சந்தித்தது. அந்த நிலைமையில் 2021இல் சென்னை அணியுடன் மீண்டும் ரெய்னா இணைந்த நிலையில் எம்எஸ் தோனி தலைமையில் மீண்டும் அசத்தலாக செயல்பட்ட அந்த அணி அதே துபாய் மண்ணில் 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

Raina-1

ஆனால் சமீப காலங்களாக பெரிய அளவில் ரன்களை எடுக்க தவறினார் என்பதற்காக இந்த வருடம் ரெய்னாவை ஏலத்தில் வாங்கமல் கழற்றிவிட்ட அந்த அணி நிர்வாகம் நன்றி இல்லாமல் நடந்து கொண்டது. அதற்கு பலனாய் மீண்டும் 2020க்கு பின்பு வரலாற்றில் 2-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறி உள்ளதாக ரெய்னாவின் ரசிகர்கள் வெளிப்படையாகவே சமூக வலைதளங்களில் பேசுகின்றனர்.

- Advertisement -

சாதா டீம்:
1. அதாவது 2008 முதல் 2022 வரை சென்னை பங்கேற்ற 13 சீசன்களில் 11 முறை ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற போதெல்லாம் அந்த அணியில் சுரேஷ் ரெய்னா இருந்தார். அவர் இல்லாத 2020, 2022 ஆகிய 2 வருடங்களிலும் அந்த அணியால் பிளே-ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியவில்லை.

2. அதேபோல் அவரில்லாமல் இதுவரை அந்த அணி கோப்பையையும் வென்றதில்லை. இதிலிருந்தே சின்னத்தல என்று சென்னை ரசிகர்கள் கொண்டாடும் சுரேஷ் ரெய்னா அந்த அணியின் ஒரு அதிர்ஷ்ட பறவையாக இருந்துள்ளார் என்றும் அவரில்லை என்றால் தல எனப்படும் கேப்டன் எம்எஸ் தோனி இருந்தாலும் கூட சாதாரண அணியாகவே செயல்படுவது தெரிகிறது.

- Advertisement -

3. அந்த அளவுக்கு 2008 முதல் ஒவ்வொரு வருடமும் தனது அதிரடியான பேட்டிங்கால் சுரேஷ் ரெய்னா பல சரித்திர வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றி அதிக ரன்கள் குவித்த சென்னை பேட்ஸ்மன் போன்ற பல சாதனைகளைப் படைத்து மிஸ்டர் ஐபிஎல் என பெயரெடுத்தவர்.

இதையும் படிங்க : ராயுடுவின் ரிட்டையர்மென்ட் பதிவு நீங்கதான் போட்டீங்களா? – சீனியர் வீரரை கலாய்க்கும் ரசிகர்கள்

அப்படிப்பட்ட அவரை குறைந்தது பெஞ்சிலாவது அமர வைத்து அதன்பின் ஒருசில வாய்ப்புகளை கொடுத்திருந்தால் நன்றாக செயல்பட்டு சென்னையை வெற்றிபெற வைத்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் 40 வயதை கடந்தும் தோனி சிறப்பாக செயல்படுகிறார் என்றால் 35 வயதை மட்டுமே கடந்துள்ள அவராலும் கண்டிப்பாக சிறப்பாக செயல்படும் முடியும்.

Advertisement