உங்க 2 பேர் கழுத்திற்கு மேல கத்தி தொங்குது. பாத்து உஷாரா விளையாடுங்க – சீனியர்களை எச்சரித்த ஹர்பஜன்

Harbhajan
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இறுதி கட்டமானது தற்போது நெருங்கியுள்ளது. அதன்படி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று முடிந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. அதனை தொடர்ந்து நாளை 11-ஆம் தேதி கேப்டவுன் நகரில் துவங்க இருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த தொடரை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகரித்துள்ளது.

Elgar

- Advertisement -

இந்த தொடர் முழுவதுமே பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டு வரும் இந்திய அணியின் சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடியுள்ளதால் மீண்டும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் இருவரது இடம் குறித்தும் பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் கூறுகையில் : ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் நடைபெற்ற ஒரே ஒரு நல்ல விஷயம் யாதெனில் ரஹானே ஸ்கோர் செய்ததுதான். அரைசதம் அடித்த அவர் மீண்டும் அணியில் விளையாட ஒரு வாய்ப்பை பெற்றுள்ளார்.

pujara

இனி அவர் அடிக்கும் அரை சதங்களை சதங்களாக மாற்ற வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் தங்களது அனுபவத்தின் காரணமாகவே தொடர்ந்து அணியில் இடம் பெற்று வருகின்றனர். அவர்களது திறனை தொடர்ந்து காண்பித்தால் மட்டுமே அவர்கள் அணியில் நீடிக்க முடியும் என்பதனால் அவர்கள் இருவரின் கழுத்தின் மீது தற்போது கத்தி தொங்குகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக காயம் காரணமாக நாடு திரும்பிய விக்கெட் கீப்பர் – என்ன இப்படி ஆயிடுச்சி

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் இருவரும் இரண்டாவது போட்டியின்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதால் மூன்றாவது போட்டியிலும் சிறப்பாக விளையாடுவார்கள் என நம்புவதாக ஹர்பஜன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இளம்வீரர்களான ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் விஹாரி ஆகியோர் சிறப்பாக விளையாடி வருவதால் அவர்களது இடம் கடும் நெருக்கடியில் உள்ளது உண்மைதான்.

Advertisement