கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக காயம் காரணமாக நாடு திரும்பிய விக்கெட் கீப்பர் – என்ன இப்படி ஆயிடுச்சி

Buttler
- Advertisement -

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி தற்போது ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த போட்டியின் முதல் 4 ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் 3 க்கு 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது. நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றியின் விளிம்பு வரை சென்ற ஆஸ்திரேலிய அணியானது இறுதியில் ஒரு விக்கெட்டை வீழ்த்த முடியாமல் தங்களது 4-வது வெற்றியை நூலிழையில் தவறவிட்டது.

aus vs eng

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5-வது போட்டி இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது. இந்த போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெறும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அந்த அளவிற்கு தற்போது இங்கிலாந்து அணியின் ஆட்டம் மோசமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அந்த அணியின் வலிமையை மேலும் பாதிக்கும் விடயமாக தற்போது முன்னணி விக்கெட் கீப்பர் காயம் காரணமாக இந்த 5வது போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் தோல்வியை தவிர்க்க போராடிய ஜாஸ் பட்லர் தனது விரலில் அடிவாங்கி காயமடைந்தார். போட்டி முடிந்த பின்னர் அவரது காயத்தின் தன்மை குறித்து எடுக்கப்பட்ட ரிப்போர்ட்டில் அவர் தொடர்ந்து 5வது போட்டியில் விளையாட முடியாது என்றும் அந்த அளவிற்கு காயம் சீரியசாக உள்ளதால் அவர் இந்த 5-வது போட்டியில் இருந்து விலகி நாடு திரும்புகிறார் என்றும் அறிவித்தது.

Buttler

இது குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் கூறுகையில் : ஜாஸ் பட்லர் எங்களது அணியின் மிக முக்கியமான வீரர். அவர் இல்லாதது எங்கள் அணிக்கு நிச்சயம் பின்னடைவு தான் ஆனாலும் அவருக்கு பதிலாக விளையாடும் மாற்று வீரர்கள் அணியில் எங்களிடம் உள்ளனர். தொடர்ந்து நாங்கள் தோல்வியைத் தழுவிய வருவதால் எங்களிடம் போதிய பிளான் மற்றும் நோக்கம் இல்லை என நினைத்துவிட வேண்டாம்.

- Advertisement -

இதையும் படிங்க : தல தோனியை பகிரங்கமாக நக்கல் செய்த கொல்கத்தா அணி. திருப்பி ஜடேஜா கொடுத்த பதிலடி – ரசிகர்களும் விளாசல்

நிச்சயம் எங்கள் அணிக்கு எதிர்வரும் 5வது டெஸ்ட் போட்டி சிறப்பாக அமையும் என்றும் மீண்டும் நாங்கள் வெற்றி பாதைக்கு திரும்ப அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் என ஜோ ரூட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement