தல தோனியை பகிரங்கமாக நக்கல் செய்த கொல்கத்தா அணி. திருப்பி ஜடேஜா கொடுத்த பதிலடி – ரசிகர்களும் விளாசல்

Jadeja
Advertisement

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரானது தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று ஆட்டங்கள் நடைபெற்று முடிந்த வேளையில் ஆஸ்திரேலிய அணியானது 3 க்கு 0 என்ற கணக்கில் ஏற்கனவே டெஸ்ட் தொடரை கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையே சிட்னி மைதானத்தில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியின் போது போட்டியின் கடைசி நாளில் இங்கிலாந்து அணி எப்படியோ கஷ்டப்பட்டு போட்டியை இறுதியில் டிரா செய்தது. இந்த போட்டியின் 4-வது இன்னிங்சில் 9 விக்கெட்டுகள் வீழ்ந்த பின்னர் கடைசியாக ஆண்டர்சனும், பிராடும் பேட்டிங் செய்து கொண்டிருக்கையில் 2 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு விக்கெட் தேவைப்பட்டது.

test fielding

இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி அந்த இரண்டு பேருக்கு எதிராகவும் ஒரு வித்தியாசமான பீல்டிங் செட்டப்பை அமைத்திருந்தது. அதன்படி விக்கெட் கீப்பரோடு சேர்த்து மொத்தம் ஒன்பது பீல்டர்கள் பந்தை தொட முடியாத அளவிற்கு பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கமாக நிறுத்தப்பட்டனர். இந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் நடைபெற்ற இந்த சம்பவம் போன்று டி20 கிரிக்கெட்டிலும் நடைபெற்றுள்ளது என்று கொல்கத்தா அணி நிர்வாகம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளது.

- Advertisement -

அதில் சென்னை அணியின் கேப்டன் தோனி புனே அணிக்காக விளையாடும் போது கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ நெருக்கமான ஃபீலிங்கை எதிர்கொண்டு விளையாடினார். அப்படி இருக்கும் அந்த புகைப்படத்தை பகிர்ந்த கொல்கத்தா அணியானது டி20 கிரிக்கெட்டிலும் இதேபோன்று பீல்டிங் செட் செய்து இருக்கிறோம் என தோனியின் புகைப்படத்தை பகிர்ந்து இது டி-20-யில் நடந்த மாஸ்டர் ஸ்ட்ரோக் என்று கிண்டல் செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த புகைப்படமானது இணையத்தில் வேகமாக வைரலாகி வர தல தோனியை இப்படி விமர்சிக்கிறீர்கள் என சென்னை அணியின் ரசிகர்கள் இந்தப் பதிவிற்கு தங்களது பதிலடி கொடுத்து வருகின்றனர். அதே வேளையில் தோனியின் நெருங்கிய நண்பரும், சி.எஸ்.கே அணியின் துணைக்கேப்டனுமான ஜடேஜா அவரது ட்விட்டர் பக்கத்தில் வாயிலாக அந்தப் புகைப்படத்திற்கு அளித்துள்ள பதிலில் :

இதையும் படிங்க : INDvsRSA : 3 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

இது மாஸ்டர் ஸ்ட்ரோக் அல்ல. (முடிந்தால் என்னை அவுட்டாகி பாருங்கள் என்று நிற்கிறார்) இது “ஷோ ஆஃப்” என்று சிரிக்கும் எமோஜியை பதிவு செய்து கொல்கத்தா அணிக்கு பதிலடி கொடுத்துள்ளார். சென்னை அணியின் ரசிகர்களும் இந்த பதிவுக்கு தங்களது காட்டமான கருத்துக்களை பதிலாக அளித்து வருகின்றனர். இந்த புகைப்படம் குறித்த உங்களது கருத்து என்ன பகிரலாம் நண்பர்களே.

Advertisement