INDvsRSA : 3 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை கேப்டவுன் நகரில் துவங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்கிற காரணத்தினால் நாளைய போட்டியில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. செஞ்சூரியன் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி அபாரமாக வீழ்த்திய இந்திய அணியானது 2வது போட்டியிலும் அவர்களை வீழ்த்தி வரலாறு படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

INDvsRSA

- Advertisement -

ஆனால் விராட் கோலி முதுகு வலியின் காரணமாக இரண்டாவது போட்டியில் விளையாட முடியாமல் போக இந்திய அணிக்கு இது பெரிய சறுக்களாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் 3வது போட்டியில் தற்போது மீண்டும் கேப்டன் விராட் கோலி அணிக்கு திரும்புவதால் நிச்சயம் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நாளைய போட்டிக்கான இந்திய அணியில் யார்? யார்? இடம் பிடிப்பார்கள் என்பதை பற்றிய உத்தேச பிளேயிங் லெவனை நாங்கள் உங்களுக்காக இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி இந்த கடைசி போட்டிக்கான இந்திய அணியில் அணியில் இரண்டு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

umesh

அதன்படி கேப்டன் விராட் கோலி அணியில் இடம் பெறுவதால் விஹாரி அணியில் இருந்து வெளியேறுகிறார். மேலும் தொடை பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வரும் சிராஜ் விளையாட முடியாமல் போகும் பட்சத்தில் உமேஷ் யாதவ் அல்லது இஷாந்த் சர்மா ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி நாளைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

- Advertisement -

இதையும் படிங்க : INDvsRSA : 3 ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது ? – ஹர்பஜன் சிங் கணிப்பு

1) கே.எல் ராகுல், 2) மாயங்க் அகர்வால், 3) புஜாரா, 4) விராட் கோலி, 5) ரஹானே, 6) ரிஷப் பண்ட், 7) ஷர்துல் தாகூர், 8) அஷ்வின், 9) பும்ரா, 10) முகமது ஷமி, 11) உமேஷ்/இஷாந்த்

Advertisement