INDvsRSA : 3 ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது ? – ஹர்பஜன் சிங் கணிப்பு

Harbhajan
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 11-ஆம் தேதி கேப்டவுன் நகரில் துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்று முடிந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிப்பதால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதன் காரணமாக மூன்றாவது போட்டி பரபரப்புக்கு சற்றும் குறைவின்றி நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Elgar

- Advertisement -

ஆனால் இரண்டாவது போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. இந்நிலையில் மூன்றாவது போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி அணிக்கு திரும்பும் பட்சத்தில் நிச்சயம் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக பலரும் கூறிவருகின்றனர். இந்நிலையில் இந்த மூன்றாவது போட்டியில் வெற்றி பெறும் அணி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறுகையில் :

என்னைப் பொறுத்தவரை நிச்சயம் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் எப்போதெல்லாம் நாம் இது போன்ற வெளிநாடுகளுக்கு பயணிக்கிறோமோ அப்போதெல்லாம் இதைப்போன்ற வலுவான பவுலிங் யூனிட் நம்மிடம் இருந்ததில்லை.

thakur 2

ஆனால் தற்போது மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு கூட்டணி நம்மிடம் இருக்கிறது. உலகத்தரம் வாய்ந்த பவுலர்களான பும்ரா, ஷமி, சிராஜ், ஷர்துல் தாகூர் என பலரும் நம் அணியில் இருக்கின்றனர். நிச்சயம் நம்முடைய பந்து வீச்சினை வைத்து தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்த நமக்கு வாய்ப்பு உள்ளது. முதல்முறையாக நாம் நிச்சயம் தென்னாப்பிரிக்க மண்ணில் இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்று நம்பிக்கை என்னிடம் உள்ளது என்று அவர் கூறினார்.

- Advertisement -

இதையும் படிங்க : யார் வேனா விளையாடட்டும். ஆனா இதை செய்தே ஆகனும். இந்தியபேட்ஸ்மேன்களுக்கு ஆர்டர் போட்ட – டிராவிட்

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : கேப்டவுன் மைதானம் எப்போதுமே இந்திய அணிக்கு சாதகமாக ஒன்று என்பதனாலும் தற்போது உள்ள தென் ஆப்பிரிக்க அணி முன்பை விட ஒரு மாறுபட்ட அணி என்பதனாலும் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு ஒரு படிமேல் உள்ளதாக ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement