யார் வேனா விளையாடட்டும். ஆனா இதை செய்தே ஆகனும். இந்தியபேட்ஸ்மேன்களுக்கு ஆர்டர் போட்ட – டிராவிட்

dravid agarwal
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி வரும் 11-ஆம் தேதி கேப்டவுன் நகரில் துவங்க உள்ளது இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெறவே இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாவது போட்டியின் போது இந்திய அணி சந்தித்த எதிர்பாராத தோல்வி காரணமாக இந்த தொடரானது தற்போது சமநிலையில் உள்ளது.

INDvsRSA

இந்நிலையில் கடந்த போட்டியின் போது முதுகு வலி காரணமாக ஓய்வில் இருந்த விராட் கோலி மீண்டும் 3 ஆவது போட்டியில் அணிக்கு திரும்புகிறார். இதன் காரணமாக நிச்சயம் மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் இந்த போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கும் பேட்ஸ்மேன்களுக்கு முக்கிய கட்டளை ஒன்றை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்திய அணியில் எந்த பேட்ஸ்மேன்கள் விளையாடினாலும் சரி ஒரு விடயத்தை மட்டும் செய்தே ஆக வேண்டும் என்று ராகுல் டிராவிட் தனது கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

pujara

இதுகுறித்து வெளியான அந்த தகவலில் : ஒவ்வொரு பேட்ஸ்மேனும் களத்தில் குறைந்தபட்சம் 50 பந்துகளையாவது சந்திக்க வேண்டும் என்று டிராவிட் கூறியிருக்கிறாராம். அப்படி 50 பந்துகளை சந்திக்க என்ன காரணம் எனில் பந்துகளை நிறைய சந்திப்பதன் மூலம் மைதானத்தின் தன்மை என்ன என்பது தெரியவரும்போது என்பது மட்டுமின்றி பேட்ஸ்மேன்கள் இயல்பாக விளையாட முடியும்.

இதையும் படிங்க : வீடியோ : கேட்சை விட்டது மட்டுமின்றி 7 ரன்களை விட்டுக்கொடுத்த பங்களாதேஷ் வீரர்கள் – நீங்களே பாருங்க

அது மட்டுமின்றி ஒவ்வொரு வீரரும் இப்படி 50 பந்துகளில் மேல் சந்தித்தால் பின் வரிசையில் வரும் வீரர்கள் தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்பதனால் இந்த ஒரு கோரிக்கையை டிராவிட் முன் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement