வீடியோ : கேட்சை விட்டது மட்டுமின்றி 7 ரன்களை விட்டுக்கொடுத்த பங்களாதேஷ் வீரர்கள் – நீங்களே பாருங்க

Mistake
Advertisement

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணியானது தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய பங்களாதேஷ் அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. அதனை தொடர்ந்து தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

nzvsban

அதன்படி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 349 ரன்கள் அடித்து ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்துள்ளது. கேப்டன் டாம் லேதம் 186 ரன்களுடனும், டேவான் கான்வே 99 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முதல்நாளே கிட்டத்தட்ட 350 ரன்கள் அடித்து உள்ளதால் நிச்சயம் இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் ஆதிக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஏற்கனவே பங்களாதேஷ் ஒரு போட்டியை வென்று உள்ளதால் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை இழக்கும் அபாயத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்பதனால் நியூசிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றிபெற மும்முரம் காட்டும். இந்நிலையில் இந்த போட்டியின்போது பங்களாதேஷ் அணி வீரர்கள் செய்த பீல்டிங் தவறு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

எப்பொழுதுமே கிரிக்கெட் களத்தில் நடைபெறும் பீல்டிங் சொதப்பல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறும். அந்த வகையில் இன்றைய போட்டியின் போது பங்களாதேஷ் வீரர்கள் செய்த ஒரு தவறு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் வில் யங் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது பந்து பேட்டில் பட்டு ஸ்லிப் திசையை நோக்கி பறந்தது.

இதையும் படிங்க : கொரோனா பரவல் காரணமாக இந்தியா வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஏற்பட்டுள்ள மாற்றம் – பி.சி.சி.ஐ முடிவு

ஆனால் ஸ்லிப்பில் நின்ற பீல்டர் அந்த பந்தினை தவறவிட அந்த பந்தானது பவுண்டரி லைனை நோக்கி சென்றது. அதற்குள் பேட்ஸ்மேன்கள் 3 ரன்கள் ஓடினர். இந்த மூன்றாவது ரன்னுக்கு பேட்ஸ்மேன்கள் ஓடி வரும்போது பந்தினை கையில் வைத்திருந்த விக்கெட் கீப்பர் தேவையில்லாமல் எதிர்புறம் த்ரோ செய்தார். ஆனால் எதிர்புறம் யாரும் அந்த பந்தினை தடுக்க முடியாமல் பந்து பவுண்டரிக்கு சென்றது. இதனால் ஒரே பந்தில் 7 ரன்கள் விட்டுக் கொடுக்கப்பட்டது. பங்களாதேஷ் அணி வீரர்கள் செய்த இந்த தமாஷான பீல்டிங் சொதப்பல் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement