கொரோனா பரவல் காரணமாக இந்தியா வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஏற்பட்டுள்ள மாற்றம் – பி.சி.சி.ஐ முடிவு

BCCI
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதனைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இந்திய அணி விளையாடாயிருக்கிறது. அதனை தொடர்ந்து நாடு திரும்பும் இந்திய அணி அடுத்த மாதம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.

Indvswi

- Advertisement -

இந்த தொடரின் முதல் 3 ஒருநாள் போட்டிகள அஹமதாபாத், ஜெய்பூர், கொல்கத்தா ஆகிய நகரங்களில் பிப்ரவரி 6, 9 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. அதை தொடர்ந்து 15,18,20 ஆகிய தேதிகளில் கட்டாக், விசாகப்பட்டினம், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் டி20 தொடரானது நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்காக மொத்தம் 6 மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக அடுத்த மாதம் இந்தியாவில் இன்னும் நிலைமை மோசமாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தற்போது இந்த இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் சில மாற்றங்களைச் செய்வது குறித்து பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆறு போட்டிகளும் ஆறு நகரங்களில் நடப்பதைத் தவிர்த்து மூன்று மைதானங்களில் மட்டுமே நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலியின் வருகையால் 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இடத்தை இழக்கப்போவது – யார் தெரியுமா?

ஏனெனில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் நீண்ட தூரப் பயணங்களை தவிர்த்து அருகருகில் போட்டிகள் நடந்தால் எந்த பிரச்சினையும் ஏற்படாது என்பதால் குறிப்பிட்ட மூன்று மைதானத்தில் போட்டியை நடத்த பிசிசிஐ தற்போது ஆலோசனை மேற்கொண்டுவருகிறது. இதுகுறித்த அறிவிப்பு தொடர் நெருக்கத்தில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement