இந்த மாதிரி ஒரு வீரர் இந்திய அணியில் ஆடியதே இல்ல. அவருக்கு சேன்ஸ் கொடுங்க ப்ளீஸ் – ஹர்பஜன் ஆதரவு

Harbhajan
- Advertisement -

முன்பெல்லாம் இந்திய அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டுமெனில் உள்ளூர் போட்டிகளிலும், ரஞ்சித் தொடரிலும் அதேபோன்று சையது முஷ்டாக் அலி போன்ற உள்நாட்டு தொடர்களிலும் தங்களது திறனை தொடர்ந்து நிரூபித்தாக வேண்டும். ஆனால் தற்போதைய சூழலில் ஒரு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டால் கூட இந்திய அணியில் இடம்பிடிக்கும் அளவிற்கு வந்துவிடுகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே பல இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடித்தும் விளையாடியிருக்கின்றனர்.

PBKS vs SRH

- Advertisement -

அந்த வகையில் நடப்பு ஐபிஎல் தொடரிலும் பல இளம் வீரர்கள் தங்களது சிறப்பான செயல்பாட்டினை வெளிப்படுத்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் அசத்தலான செயல்பாட்டினை வெளிப்படுத்தி வருகிறார்.

உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் தனது அதிவேகமான பந்துவீச்சின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். மணிக்கு 150 கிலோமீட்டர் வேகம் என்ற வேகத்தில் சராசரியாக வீசி வரும் உம்ரான் மாலிக் நடப்பு ஐபிஎல் தொடரின் அதி வேகப்பந்து பந்தான 157 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு பஙந்தினை வீசி சாதனை செய்துள்ளார்.

இந்நிலையில் இப்படி அதிவேகமாக பந்துவீசும் உம்ரான் மாலிக்கை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று பல்வேறு குரல்கள் வலுத்து வருகின்றன. அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கும் அவருக்கு ஆதரவாக தனது கருத்தினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் எனக்கு மிகவும் பிடித்த வீரர் உம்ரான் மாலிக் தான்.

- Advertisement -

சிறந்த வேகப்பந்து வீச்சாளரான அவரை இந்திய அணியில் பார்க்க விரும்புகிறேன். அவருடைய அதிவேகமான பந்துவீச்சு அனைவரையும் கவர்ந்துள்ளது. தற்போது அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்று வரும் அவர் நிச்சயம் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும். அதோடு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியிலும் அவரை எடுத்தால் நன்றாக இருக்கும்.

இதையும் படிங்க : ஐபிஎல் தொடருக்கு பின் இந்தியாவின் புதிய கிரிக்கெட் தொடர் – வெளியான முழு அட்டவணை இதோ

ஏனெனில் ஒரு புறம் பும்ரா பந்து வீசினால் அவருக்கு துணையாக உம்ரான் மாலிக் சிறப்பாக செயல்படுவார் என்பது என்னுடைய கணிப்பு. மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் எந்த ஒரு பந்து வீச்சாளரும் இந்திய அணியில் விளையாடியதில்லை. எனவே இது ஒரு பெரிய விஷயம் என்று நான் நினைக்கிறேன். நிச்சயம் உம்ரான் மாலிக் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று ஹர்பஜன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement