ஐபிஎல் தொடருக்கு பின் இந்தியாவின் புதிய கிரிக்கெட் தொடர் – வெளியான முழு அட்டவணை இதோ

IND
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் உச்ச கட்ட பரபரபபை எட்டியுள்ளன. கடந்த மார்ச் 26-ஆம் தேதி மும்பையில் கோலாகலமாக துவங்கிய இந்த தொடரில் தற்போது நடைபெற்று வரும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற அனைத்து அணிகளும் போட்டி போட்டு வருகின்றன. இதில் நடப்புச் சாம்பியன் சென்னை மற்றும் மும்பை ஆகிய அணிகள் மட்டும் ஆரம்பத்திலேயே பெற்ற தொடர் தோல்விகளால் முதல் அணிகளாக லீக் சுற்றுடன் வெளியேறுவது உறுதியாகிவிட்டது.

IPL 2022 (2)

- Advertisement -

இருப்பினும் எஞ்சிய 4 இடங்களுக்கு மீதமுள்ள 8 அணிகள் கடும் போட்டி போடுவதால் இந்த தொடர் மிகவும் உச்ச கட்ட பரபரப்பில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வரும் மே 22-ஆம் தேதிக்குப் பின் கொல்கத்தா மற்றும் அஹமதாபாத் ஆகிய நகரங்களில் முக்கியமான பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்திய தொடர்:
அதை தொடர்ந்து இந்த சீசனின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மாபெரும் இறுதி போட்டி வரும் மே 29-ஆம் தேதியன்று குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி உட்பட அனைத்து முக்கிய இந்திய வீரர்களும் பங்கேற்று வருகின்றனர். இந்த தொடர் முடிந்த பின் மீண்டும் இந்தியாவிற்காக ஒன்று சேரும் இவர்கள் 10 நாட்கள் கழித்து ஜூன் 9 – 19 வரை தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளனர்.

Indian Team

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்த தொடர் நடைபெறும் என்று ஏற்கனவே பிசிசிஐ அறிவித்து அட்டவணையும் வெளியிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அயர்லாந்துக்கு செல்லும் இந்தியா அங்கு அந்த அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வரும் ஜூன் 26, 28 ஆகிய தேதிகளில் பங்கேற்க உள்ளது. அதை முடித்து விட்டு அப்படியே பக்கத்தில் இருக்கும் இங்கிலாந்துக்கு பறக்கும் இந்தியா கடந்த வருடம் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ரத்து செய்யப்பட்ட 5-வது டெஸ்ட் போட்டியில் (4 போட்டிகளின் முடிவில் இந்தியா 2 – 1* என முன்னிலையில் உள்ளது) ஜூலை 1-ஆம் தேதி பங்கேற்க உள்ளது.

- Advertisement -

வெஸ்ட்இண்டீஸ் தொடர்:
அத்துடன் அதே இங்கிலாந்துக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களிலும் இந்தியா பங்கேற்க உள்ளது. அந்த வகையில் வரும் ஜூலை 17-ஆம் தேதி இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் அதை முடித்துக் கொண்டு அப்படியே வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இந்தியா பங்கேற்க உள்ளதாக தற்போது புதிய செய்தி வெளியாகியுள்ளது. வெஸ்ட் இண்டீசில் துவங்கும் இந்த சுற்றுப்பயணம் அமெரிக்காவில் நிறைவடையும் என்றும் தெரிய வருகிறது.

INDvsWI

இது பற்றி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் பேசியது பின்வருமாறு. “அமெரிக்காவில் நடைபெறும் போட்டிக்கான அனுமதிக்காக காத்திருக்கிறோம். அது கிடைத்தவுடன் விரைவில் அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியிடுவோம். மேலும் இந்தியாவுக்கு எதிரான தொடர் நடைபெற இன்னும் 3 மாதங்கள் உள்ளதால் அதற்குள் தேவையான மருத்துவ வசதிகளையும் கட்டுப்பாட்டு வளையங்களையும் தயார் செய்ய உள்ளோம்” என தெரிவித்தார்.

அட்டவணை:
அந்த அறிவிப்பின் படி ஜூலை 22, 24, 27 ஆகிய தேதிகளில் முதலாவதாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முழுவதும் டிரினிடாட் நகரில் இருக்கும் குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதன்பின் ஜூலை 29-ஆம் தேதி துவங்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி புதிதாக கட்டப்பட்டுள்ள பிரைன் லாரா மைதானத்தில் நடைபெற உள்ளது. அடுத்த 2 போட்டிகள் செயின்ட் கிட்ஸ் நகரிலுள்ள வார்னர் பார்க் மைதானத்தில் ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதன்பின் இந்த சுற்றுப் பயணத்தின் கடைசி 2 போட்டிகள் வரும் ஆகஸ்டு 6, 7 ஆகிய தேதிகளில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள போர்ட் லாடேர்டேல் மைதானத்தில் நிறைவுக்கு வருகிறது.

indvswi

இந்தியாவின் வெஸ்ட்இண்டீஸ் சுற்றுப்பயணம் 2022 அட்டவணை:
ஜூலை 22 : முதல் ஒருநாள் போட்டி, டிரினிடாட்.
ஜூலை 24 : 2-வது ஒருநாள் போட்டி, ட்ரினிடாட்.
ஜூலை 27 : 3-வது ஒருநாள் போட்டி, டிரினிடாட்.
ஜூலை 29 : முதல் டி20, ட்ரினிடாட் & டபாகோ
ஆகஸ்ட் 1 : 2-வது டி20, செயின்ட் கிட்ஸ் & நெவிஸ்
ஆகஸ்ட் 2 : 3-வது டி20, செயின்ட் கிட்ஸ் & நெவிஸ்
ஆகஸ்ட் 6 : 2-வது டி20, ப்ளோரிடா
ஆகஸ்ட் 7 : 3-வது டி20, ப்ளோரிடா

Advertisement