பாண்டியா வேணாம் இவரை டீம்ல இருந்து தூக்குங்க. இந்தியா வேறமாதிரி ஆய்டும் – ஹர்பஜன் சிங் பேட்டி

Harbhajan
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற்று வருகிறது. கடந்த 17ஆம் தேதி துவங்கிய இந்த தொடரில் மொத்தம் 12 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து விளையாடி வருகின்றன. இதில் குரூப் 2-ல் இடம் பெற்றுள்ள இந்திய அணியானது தங்களது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. அதனை தொடர்ந்து தற்போது நியூசிலாந்து அணியுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை 2-வது லீக் போட்டியில் விளையாட உள்ளது.

Hafeez

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்க உள்ளது. முதல் போட்டியின் போது இந்திய அணி தோல்வி அடைந்ததால் அணியில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் குறித்த பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அதிலும் குறிப்பாக ஹர்திக் பாண்டியாவின் இடம் பெரிய அளவில் பேசப்படும் விடயமாக மாறியது.

இந்நிலையில் அடுத்த போட்டியில் இந்திய அணியை பலமிக்க அணியாக மாற்ற வேண்டுமெனில் அணியில் ஒரு முக்கிய மாற்றத்தை செய்தாக வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

ishan 1

இந்திய அணியில் ஓப்பனிங் ஜோடி தற்போது சற்று சறுக்கலை சந்தித்து இருக்கிறது. எனவே துவக்க வீரர்களில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். அதன்படி இஷான் கிஷனை ரோகித் சர்மாவுடன் இறக்கிவிட்டு ராகுலை 4-வது வீரராக விளையாட வைத்தால் இந்திய அணி பவர்பிளே ஓவர்களில் 60 முதல் 70 ரன்கள் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்த 2 அணிகள் இறுதிப்போட்டியில் மோதினால் அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் தான் – சக்லைன் முஷ்டாக்

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இப்படி இந்திய அணி துவக்கத்திலேயே ரன் குவிக்கும் பட்சத்தில் பந்துவீச்சிலும் நல்ல நம்பிக்கை பிறக்கும். மேலும் வருண் சக்கரவர்த்தியை ஒரே போட்டியின் முடிவில் அணியில் இருந்து நீக்குவது சரியல்ல. அவரைத் தொடர்ந்து அணியில் விளையாட வைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement