ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் தலா 6 அணிகள் மோதுகின்றன. இந்த இரண்டு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டியில் விளையாடும். அதேபோல் அரையிறுதியில் இதில் வெற்றி பெறும் இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.

இந்நிலையில் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் எந்த இரு அணிகள் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடினால் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக அமையும் என்பது குறித்து பாகிஸ்தான் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளரான சக்லைன் முஷ்டாக் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த உலக கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதினால் நிச்சயம் நான் சந்தோஷம் அடைவேன்.
அது மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அது மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கும் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : மீண்டும் ஒருமுறை இரு நாட்டு அணிகளும் விளையாடும்போது இரு அணிகளுக்கும் இடையிலான உறவு மேம்படும்.

முந்தைய ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி எங்களது வீரர்களை கட்டி தழுவியதும், தோனி எங்கள் அணி வீரர்களுடன் உரையாடியதும், எங்களது அணி வீரர்களின் தன்னடக்கம் ஆகியவை அனைத்தையும் பார்க்கும் போது மக்களாகிய நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் நேசிக்கிறோம் என்றும் நாம் அனைவரும் சமம் தான் இது விளையாட்டு என்ற தகவலை உலகிற்கு உணர்த்துவதாக இருந்தது.
இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியா விளையாடவில்லை என்றால் அவரது இடத்தில் விளையாட வாய்ப்புள்ள 3 வீரர்கள் – லிஸ்ட் இதோ
விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம். நட்புறவு வெற்றி பெறட்டும் என்று நான் எப்போதும் சொல்வதுண்டு அந்த வகையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடினால் ஐ.சி.சி மகிழ்ச்சி அடையும் அதுமட்டுமின்றி ரசிகர்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



