ஹார்டிக் பாண்டியா விளையாடவில்லை என்றால் அவரது இடத்தில் விளையாட வாய்ப்புள்ள 3 வீரர்கள் – லிஸ்ட் இதோ

- Advertisement -

உலகக் கோப்பை இந்திய அணியில் தற்போது அதிகம் பேசப்பட்டு வரும் விடயமாக ஆல்ரவுண்டர் ஹர்டிக் பாண்டியாவின் இடம் மாறி உள்ளது. ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பந்து வீசாமல் இருந்து வரும் பாண்டியா அணியில் தொடர்ச்சியாக பேட்ஸ்மேனாக நீடிக்க முடியாது என்று கூறப்படுகிறது. ஏனெனில் பின்வரிசையில் இறங்கும் அவர் நிச்சயம் பந்து வீசினால் மட்டுமே அணியில் தொடர முடியும் என்ற நிலை இருக்க தற்போது வரை அவர் பந்து வீசாமல் இருந்து வருகிறார்.

pandya 3

பயிற்சி போட்டியின் போது பந்து வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சூப்பர் 12 முதல் போட்டியின் முடிவில் கூட அவர் பந்து வீசாமல் உள்ளதால் அவர் நிச்சயம் அடுத்த போட்டியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்து வருகின்றன. அப்படி அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ள மூன்று வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

- Advertisement -

1) ஷர்துல் தாகூர் : இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக தற்போது வளர்ந்து வரும் இளம் வீரர் தாகூர் பந்துவீச்சில் விக்கெட் டேக்கராக இருப்பது மட்டுமின்றி பேட்டிங்கிலும் ஓரளவு கை கொடுக்க கூடியவர். ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் சில அரை சதங்களை விளாசி தனது பேட்டிங் திறமையை நிரூபித்த அவர் பாண்டியாவிற்கு மாற்று வீரராக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

thakur 1

2) இஷான் கிஷன் : ஐபிஎல் தொடரின்போது இறுதி கட்டத்தில் தனது அதிரடியை மீண்டும் ஒருமுறை நிரூபித்த இஷான் கிஷன் பயிற்சி போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்திய அணியின் துவக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழக்கும் போது மிடில் ஆர்டரில் இவரை போன்று ஒரு அதிரடி வீரர் இருக்கும் போது அது அணியின் ரன் குவிப்பிற்கு உதவும் என்பதனால் இஷான் கிஷனும் பாண்டியாவிற்கு பதிலாக அணியில் தேர்வு ஒரு வாய்ப்பு உள்ளது.

3) ரவிச்சந்திரன் அஷ்வின் : ஐக்கிய அரபு அமீரக ஆடுகளங்களில் கூடுதல் சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குவது அணிக்கு சாதகமாக அமையும் என்பதன் காரணமாக மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக பாண்டியாவிற்கு பதிலாக அனுபவ வீரர் அஷ்வின் விளையாட வைக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர். ஏனெனில் அஷ்வினின் அனுபவம் நிச்சயம் இந்திய அணிக்கு கைகொடுக்கும் என்பதாலேயே அவர்கள் இவ்வாறு கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement