தோனி, யுவ்ராஜுடன் தினேஷ் கார்த்திக்கை ஒப்பிடுவது நியாயமில்லை. ஏன் தெரியுமா? – ஹர்பஜன் விளக்கம்

Harbhajan-and-Dinesh-Karthik
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய பாகிஸ்தான் அணியானது இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வேளையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி நவம்பர் 13-ஆம் தேதி பாகிஸ்தானை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்ளும்.

INDvsENG

- Advertisement -

இந்நிலையில் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் விளையாடுவாரா? அல்லது ரிஷப் பண்ட் விளையாடுவாரா? என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் ரிஷப் பண்ட் இன்றைய போட்டியில் விளையாடுகிறார். எனவே இன்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக்குக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது.

இந்நிலையில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் ஏழாவது பேட்ஸ்மேனாக விளையாடுவதே சிறந்தது என இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : ராகுல் டிராவிட் உடன் நான் ஒத்துப் போகிறேன். ஏனெனில் அவருக்கு ரிஷப பண்ட்டை மிகவும் பிடிக்கும். ஆனால் என்னை பொருத்தவரை தினேஷ் கார்த்திக் ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்ய விரும்புகிறேன்.

DInesh Karthik

ஏனெனில் அந்த இடத்தில் பேட்டிங் செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. அந்த வகையில் தான் நான் தினேஷ் கார்த்திக்கை மிகவும் ரசிக்கிறேன். எம்.எஸ் தோனி, யுவராஜ் சிங் போன்ற போன்றோரால் ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்ய முடியவில்லை. ஆனால் தினேஷ் கார்த்திக் அதனை செய்து காட்டுகிறார்.

- Advertisement -

எனவே அவரை யுவராஜ் மற்றும் தோனியுடன் ஒப்பிடுவதெல்லாம் நியாயம் அல்ல. தினேஷ் கார்த்திக் இந்த இடத்திற்கு வருவதற்கு நிறையவே உழைத்துள்ளார். அதே வேளையில் தோனி, யுவராஜ் போன்ற பினிஷ்களை அவரிடம் எதிர்பார்ப்பது நியாயமற்ற ஒன்று தினேஷ் கார்த்திக் பொதுவாகவே ஒரு மிகச் சிறந்த வீரர். அவரால் முடிந்தவற்றை அவர் இந்திய அணிக்காக தொடர்ந்து செய்து வருகிறார்.

இதையும் படிங்க : IND vs ENG : தொடரும் தமிழக வீரரின் சோகம், அரையிறுதியிலும் ஏமாற்றம் – இந்தியாவின் ப்ளேயிங் லெவன் இதோ

அவருக்கு நிச்சயம் தேவையான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று ஹர்பஜன் கூறியுள்ளார். ஆனாலும் அணியில் இடது கை பேட்ஸ்மேன் அவசியம் என்பதனால் இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement