IND vs ENG : தொடரும் தமிழக வீரரின் சோகம், அரையிறுதியிலும் ஏமாற்றம் – இந்தியாவின் ப்ளேயிங் லெவன் இதோ

Rohit-and-Pant
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் 2007க்குப்பின் 15 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா சூப்பர் 12 சுற்றில் பங்கேற்ற 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து குரூப் 2 புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்ததால் குரூப் 1 புள்ளி பட்டியலில் 2வது இடம் பிடித்த இங்கிலாந்தை அரையிறுதி சுற்றில் எதிர்கொள்ள தகுதி பெற்றது. அந்த நிலையில் முதல் அரை இறுதி போட்டியில் அதிர்ஷ்டத்துடன் நுழைந்த பாகிஸ்தான் வலுவான நியூசிலாந்தை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

அதனால் இங்கிலாந்தை தோற்கடித்து பரம எதிரியான பாகிஸ்தானை மீண்டும் பைனலில் எதிர்கொள்ள தயாராகும் இந்தியா நவம்பர் 10ஆம் தேதியன்று இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு துவங்கிய 2வது அரையிறுதி போட்டியில் களமிறங்கியது. புகழ்பெற்ற அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். மேலும் டேவிட் மாலன் மற்றும் மார்க் வுட் ஆகியோர் காயமடைந்ததால் பிலிப்ஸ் சால்ட் மற்றும் கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் தங்களது அணியில் விளையாடுவதாக அவர் அறிவித்தார்.

- Advertisement -

தொடரும் சோகம்:
மறுபுறம் டாஸ் தோற்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா தங்களது அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று அறிவித்தது தமிழக ரசிகர்களுக்கு சோகமாக அமைந்தது. ஏனெனில் இந்த உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்பதற்காக ஐபிஎல் 2022 தொடரில் கடினமாக உழைத்து 3 வருடங்கள் கழித்து 37 வயதில் அபார கம்பேக் கொடுத்த தினேஷ் கார்த்திக் இந்த முக்கிய போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறவில்லை. பொதுவாகவே அழுத்தமான போட்டிகளில் சொதப்ப கூடிய அவர் இந்த உலகக் கோப்பையில் முதல் 4 போட்டிகளில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த தவறியதால் ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசிப் போட்டியில் ரிசப் பண்ட் வாய்ப்பை பெற்றார்.

இருப்பினும் செமி பைனலில் இருவருமே விளையாடுவார் என்று ரோஹித் சர்மா மறைமுகமாக தெரிவித்த நிலையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் இந்த முடிவால் பைனலுக்கு இந்தியா தகுதி பெற்றாலும் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக 37 வயதை கடந்து விட்ட அவர் அடுத்ததாக நடைபெறும் நியூசிலாந்து டி20 தொடரிலும் ஏற்கனவே கழற்றி விடப்பட்ட நிலையில் இனிமேல் இந்திய அணியில் பார்க்க முடியாது என்பதால் அவருடைய இந்திய கேரியர் முடிந்து விட்டதாக கருதப்படுகிறது.

- Advertisement -

இதனால் அதை விட டாஸ் வென்றாலும் நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்திருந்ததாக ரோகித் சர்மா தெரிவித்திருந்தார். முன்னதாக அடிலெய்ட் மைதானத்தில் இதற்கு முன்பு நடைபெற்ற 12 சர்வதேச டி20 போட்டிகளிலும் டாஸ் தோற்ற அணிகள் தான் வென்றது என்ற புள்ளிவிவரம் இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ஷ்டத்தை கொடுத்துள்ளது. அப்படி தங்கமாக கிடைக்கவில்லை அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி இப்போட்டியில் வென்று பைனலுக்கு சென்று பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா கோப்பையை வெல்லுமா எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதி போட்டியில் களமிறங்கி உள்ள இந்திய அணி இதோ: ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் (கீப்பர்), அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஸ்வர் குமார், முகமது சமி, அர்ஷிதீப் சிங்.

Advertisement