ஜெயிக்கணும்னா மொத்த ஆஸி தொடரிலும் அவருக்கு சான்ஸ் கொடுங்க, ராகுல் – கில் தேர்வில் ரோஹித்துக்கு ஹர்பஜன் சிங் கோரிக்கை

- Advertisement -

உலகம் முழுவதிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் வரும் பிப்ரவரி 9 முதல் நாக்பூரில் துவங்குகிறது. வரும் ஜூலை மாதம் லண்டன் ஓவலில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு ஏற்கனவே கிட்டத்தட்ட தகுதி பெற்று விட்ட ஆஸ்திரேலியா கடைசியாக தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற 2 அடுத்தடுத்த பார்டர் – கவாஸ்கர் தொடர்களில் வரலாற்றில் முதல் முறையாக தோல்விகளை பரிசளித்த இந்தியாவை இம்முறை அதன் சொந்த மண்ணில் சாய்த்து பழி தீர்க்க போராட உள்ளது. மறுபுறம் புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் இந்தியா இத்தொடரில் குறைந்தபட்சம் 3 போட்டிகளில் வென்றால் தான் பைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற கட்டாயத்தில் களமிறங்குகிறது.

IND-vs-AUS

- Advertisement -

அதனால் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இத்தொடரில் கடந்த 10 வருடங்களாக உலகில் எந்த அணிக்கு எதிராகவும் சொந்த மண்ணில் தோற்காமல் வெற்றி நடை போட்டு வரும் இந்தியா நிச்சயம் வென்று பைனலுக்கு செல்லும் என்று இந்திய ரசிகர்கள் நம்புகின்றனர். முன்னதாக இத்தொடரின் பெரும்பாலான கிரிக்கெட் மைதானங்கள் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எப்படி இருந்தாலும் பெரும்பாலான மைதானங்களில் முதலிரண்டு நாட்களில் பேட்டிங்க்கு சாதகமான சூழ்நிலை நிலவும் என்று உறுதியாக நம்பலாம்.

ஹர்பஜன் கோரிக்கை:
எனவே அந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஆரம்பத்திலேயே பெரிய ரன்களை குவிப்பது வெற்றியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உறுதியாக சொல்லலாம். ஏனெனில் எவ்வளவு தரமான பேட்ஸ்மேனாக இருந்தாலும் 4, 5 ஆகிய நாட்களில் நிலவும் தாறுமாறான சுழலுக்கு தாக்குப்பிடிப்பது மிகவும் கடினமாகும். எனவே வெற்றிக்கு நல்ல தொடக்கம் அவசியமாக பார்க்கப்படும் இத்தொடரில் ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கப் போவது யார் என்ற கேள்வி நிலவுகிறது.

அந்த விவாதத்தில் கடந்த டிசம்பரில் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சதமடித்து சமீபத்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டிலும் அபாரமாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில் விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இருப்பினும் 2021 ஆகஸ்ட், 2022 ஜனவரியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற சவாலான வெளிநாடுகளில் சதமடித்து தனது தரத்தை நிரூபித்துள்ள ராகுல் துணை கேப்டனாக இருப்பதால் ரோகித் சர்மாவுடன் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதற்கு இர்ஃபான் பதான் போன்ற சில முன்னாள் வீரர்களின் ஆதரவும் அதிகப்படியான வாய்ப்புகளும் உள்ளது. இந்நிலையில் என்ன தான் ராகுல் தரமான வீரர் என்றாலும் தற்சமயத்தில் இருக்கும் பார்மை அடிப்படையாகக் கொண்டு சுப்மன் கில் விளையாடினால் தான் இத்தொடரை வெல்ல முடியும் என்று ரோகித் சர்மாவுக்கு முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

Harbhajan

“இந்த தொடரில் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் மிகவும் முக்கியமாகும். எந்தத் தொடருக்கும் ஓப்பனர்கள் தான் நல்ல தொடக்கத்தை கொடுப்பார்கள். என்னை பொறுத்த வரை இந்த ஆஸ்திரேலிய தொடரில் ரோஹித் சர்மாவுடன் சுப்மன் கில் தான் களமிறங்க வேண்டும். ஏனெனில் அவர் தற்போது அற்புதமான பார்மில் இருக்கிறார். கேஎல் ராகுல் டாப் வீரர் என்பதில் சந்தேகமில்லை என்றாலும் 2022க்குப்பின் தற்சமயத்தில் அவருடைய புள்ளிவிவரங்கள் அவருக்கு சாதகமாக இல்லை. மறுபுறம் கில் தனது வாழ்நாளின் உச்சகட்ட பார்மில் இருக்கிறார். அவர் சமீபத்தில் சில வரலாற்றுச் சாதனைகளை அசால்டாக உடைத்தார்”

இதையும் படிங்க: கே.எல் ராகுலுக்கு அந்த பொறுப்பை குடுத்துட்டு சஞ்சு சாம்சனை ஆட வையுங்க – ராபின் உத்தப்பா கருத்து

“எனவே இந்த தொடரை இந்தியா வெல்ல விரும்பினால் அதற்கு ரோகித் சர்மாவுடன் சுப்மன் கில் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும். சமீபத்தில் இவ்வளவு ரன்கள் அடித்துள்ள அவர் விளையாடும் 11 பேர் இந்திய அணியில் முதல் போட்டியில் மட்டுமில்லாமல் இந்த தொடர் முழுவதிலும் விளையாடுவதற்கு தகுதியானவர். எனவே இதே பார்மில் இதே தன்னம்பிக்கையுடன் அவர் விளையாடினால் நிச்சயமாக நிறைய ரன்களை அடிப்பாார். எனவே அவர் இத்தொடரில் விளையாடுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று கூறினார்.

Advertisement