ஓடாத வண்டிய எவ்ளோ நாள் ஓட்டுவிங்க, ராகுலுக்கு பதில் அவருக்கு சான்ஸ் கொடுங்க – ஹர்பஜன் சிங் காட்டம்

Harbhajan-Singh
- Advertisement -

வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் தன்னுடைய முதலிரண்டு போட்டிகளில் பரம எதிரி பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை தோற்கடித்து அடுத்தடுத்த வெற்றிகளை சுவைத்த ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான 3வது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அக்டோபர் 30ஆம் தேதியன்று பெர்த் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 133/9 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

David Miller Hardik Pandya IND vs SA

- Advertisement -

அதிலும் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட டாப் 5 பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 49/5 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற இந்தியாவை தனி ஒருவனாக தாங்கிப் பிடித்த சூரியக்குமார் யாதவ் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 68 (40) ரன்கள் குவித்து காப்பாற்றினார். அதை தொடர்ந்து 134 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு டீ காக் 1, ரிலீ ரோசவ் 0, கேப்டன் பவுமா 10 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

ஓடாத வண்டி:
அதனால் 24/3 என தடுமாறிய அந்த அணியை மிடில் ஆடரில் ஐடன் மார்க்ரம் 52 (41) ரன்களும் டேவிட் மில்லர் 59* (46) ரன்களும் குவித்து வெற்றி பெற வைத்தனர். இதனால் அரையிறுதிக்கு செல்ல எஞ்சிய போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக இப்போட்டியில் பந்து வீச்சாளர்கள் கடைசி ஓவர் வரை வெற்றிக்கு போராடியும் பேட்டிங்கில் 150 ரன்களை எடுக்க தவறியதே இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது அப்பட்டமாக தெரிந்தது.

KL Rahul Lungi Nigidi

அதற்கு டாப் 5 பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை குவிக்க தவறியது ஒரு காரணமாக அமைந்தாலும் சமீப காலங்களில் எந்த கிரிக்கெட் போட்டியிலுமே சிறப்பாக செயல்படாத கேஎல் ராகுல் மீண்டும் ஒருமுறை 14 பந்துகளை எதிர்கொண்டு 9 ரன்களில் அவுட்டாகி தடவலாக பேட்டிங் செய்தது தோல்விக்கு முக்கிய காரணமானது. ஏனெனில் பவர் பிளே ஓவர்களில் அதிரடியான தொடக்கத்தை கொடுக்க வேண்டிய அவர் 2019 உலகக்கோப்பை அரை இறுதி, 2021 டி20 உலகக் கோப்பை, 2022 ஆசிய கோப்பை, 2022 டி20 உலகக் கோப்பை தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் உட்பட இதுநாள் வரை தனது வாழ்நாளில் களமிறங்கிய அத்தனை அழுத்தமான போட்டிகளிலும் அதிக பந்துகளை எதிர்கொண்டு சொற்ப ரன்களில் அவுட்டாகி அடுத்த வரும் பேட்ஸ்மேன்களுக்கு பாரத்தை ஏற்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.

- Advertisement -

இத்தனைக்கும் திறமை இருந்தும் இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற சுயநலத்துடன் ஒன்று இப்படி தடவுவது அல்லது பெரிய இன்னிங்ஸ் விளையாடினாலும் குறைந்த ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி அவுட்டாவதை வழக்கமாக வைத்துள்ள அவர் பெரும்பாலான போட்டிகளில் இந்தியா 10 வீரர்களுடன் விளையாடுவதை போன்ற செயல்பாட்டை வெளிப்படுத்துகிறார்.

Harbhajan

இதனால் இந்த ஓடாத வண்டியை எத்தனை நாட்கள் ஓட்டுவீர்கள் என்று ரசிகர்கள் கோபமடையும் நிலையில் தொடர்ச்சியாக சொதப்பி வரும் ராகுலுக்கு பதிலாக இடதுகை பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் தொடக்க களமிறங்கும் முடிவை ரோகித் சர்மா எடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி போட்டி முடிந்தபின் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தத் தொடரில் வெற்றிகரமாக முன்னோக்கி செல்வதற்கு இந்திய அணி சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. குறிப்பாக கேஎல் ராகுல் சிறந்த வீரர் என்பதையும் மேட்ச் வின்னர் என்பதையும் நாம் அறிவோம்”

- Advertisement -

“ஆனால் இதே பார்மில் தொடர்ச்சியாக அவர் தடுமாறினால் நீங்கள் ரிஷப் பண்ட்டை கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறேன். அதே சமயம் தினேஷ் கார்த்திக் காயம் பற்றி எனக்கு தெரியாது. ஒருவேளை அவர் குணமடையாவிடில் ரோகித் சர்மாவுடன் ரிசப் பண்ட் தொடக்க வீரராக களமிறங்கலாம்.

இதையும் படிங்க : இது என்ன ஐ.பி.எல் மேட்ச்சா? அவருக்கு சான்ஸ் கொடுங்க, ரிஷப் பண்ட் – டிகே தேர்வில் இந்தியாவை சாடும் ஜாம்பவான்

அதனால் உங்களுக்கு ஓப்பனிங்கில் வலது – இடது கை பேட்ஸ்மேன்கள் களமிறங்கும் வாய்ப்பும் கிடைக்கும். மேலும் தீபக் ஹூடாவை நீங்கள் அணியில் சேர்க்கலாம். ஆனால் அவருக்கு ஒரு சில ஓவர்கள் பந்து வீச வழங்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement