இந்தியா தவர வேற ஏதாவது டீமுக்கு இவர் ஆடுனா கண்டிப்பா எல்லா மேட்ச்லயும் பிளேயிங் லெவன்ல ஆடுவாரு – ஹர்பஜன் கருத்து

Harbhajan-Singh
- Advertisement -

இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அகார்கர் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரது முன்னிலையில் அறிவிக்கப்பட்டது. இந்த தொடருக்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்திய அணியின் தேர்வு குறித்தும், அந்த அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் குறித்தும் பல்வேறு கருத்துக்கள் முன்னாள் வீரர்களால் பகிரப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பெறாதது இந்திய அணிக்கு பின்னடைவு என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

கடந்த 2022-ஆம் ஆண்டு மட்டும் யுஸ்வேந்திர சாஹல் 16 போட்டிகளில் பங்கேற்று 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோன்று அர்ஷ்தீப் சிங்கும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் அவரும் இந்த இந்திய அணிக்கு மிகவும் முக்கியம். இந்த இரண்டு வீரர்கள் உலக கோப்பை அணியில் இடம்பெறாதது தவறு என அவர் கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : அர்ஷ்தீப் சிங் இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் புதுப்பந்தை ஸ்விங் செய்து வீசுவார். எனவே அவர் இந்திய அணிக்கு ஒரு முக்கிய வீரராக திகழக்கூடியவர். மற்ற அணிகளை பார்க்கும்போது ஷாஹீன் அப்ரிடி, மிட்சல் ஸ்டார்க் போன்ற இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர்.

- Advertisement -

இவ்வேளையில் தற்போது இந்திய அணியில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் இல்லாதது ஒரு பின்னடைவு தான். அதேபோன்று யுஸ்வேந்திர சாஹல் ஒரு மேட்ச் வின்னர் என்பதை பலமுறை நிரூபித்து காட்டியுள்ளார். தற்போதைய இந்திய அணியில் வலது கையில் பந்து வீசும் சுழற்ப்பந்து வீச்சாளரான இவர் இந்திய மைதானங்களிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் அவரும் இந்திய அணிக்கு தேவையான ஒருவர்.

இதையும் படிங்க : IND vs PAK : இந்தியா பாகிஸ்தான் சூப்பர் 4 போட்டி குறித்து வெளியான பாசிட்டிவ் அப்டேட் – ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்

தற்போதைய இந்திய அணியில் இரண்டு இடதுகை சுழப்பந்து வீச்சாளர்கள் ஒன்றாக விளையாடும் வேளையில் சாஹல் இருந்திருந்தால் நிச்சயம் அது அணிக்கு பலனை தந்திருக்கும் என்றும் ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement