விராட் கோலிக்கு எதிரா அந்த பாகிஸ்தான் பவுலர்லாம் ஒரு பெரிய மேட்டரே கிடையாது – ஹர்பஜன் சிங் பளீச்

Harbhajan
- Advertisement -

2023-ஆம் ஆண்டிற்கான நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மிகப்பெரிய போட்டியாக பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று அக்டோபர் 14-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் இரு அணிகளாக பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரசிகர்களுக்கு மத்தியில் இன்றைய போட்டியில் விளையாட இருப்பது அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த போட்டியில் வெற்றி பெறப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை நடைபெற்று முடிந்த லீக் போட்டிகளின் அடிப்படையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளை பெற்றிருந்தாலும் இந்திய அணியானது ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தானை விட முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெற்று உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணியிடம் தோற்றதே கிடையாது என்கிற சாதனையை நிகழ்த்த இந்திய அணியும், இந்திய அணியை வீழ்த்தி முதல் முறையாக உலககோப்பை ஒருநாள் போட்டிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் பாகிஸ்தான் அணியும் களமிறங்க உள்ளதால் இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தைக் தொட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய முக்கியமான போட்டியின் போது விராட் கோலிக்கு எதிராக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் அப்ரிடி பெரிய ஆபத்தாக இருப்பார் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் விராட் கோலிக்கு எந்த விதத்திலும் ஷாஹீன் அப்ரிடியால் தொந்தரவு தர முடியாது என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : விராட் கோலி மற்றும் ஷாஹீன் அப்ரிடி இடையேயான மோதல் நன்றாக இருக்கும் இருந்தாலும் விராட் கோலியே அதில் வெற்றி பெறுவார். ஏனெனில் ஷாகின் அப்ரிடி துவக்க ஓவர்களில் பேட்ஸ்மேன்களை போல்ட் மற்றும் எல்.பி. எடுக்கவே முயற்சிக்கிறார். ஆனால் விராட் கோலியிடம் இருக்கும் திறமைக்கு அதெல்லாம் பெரிய விடயமே கிடையாது.

இதையும் படிங்க : என்னாது 1 சிக்சர் கூட இல்லாம 20 ஓவரில் 427 ரன்களா.. விசித்திர ஸ்கோர்கார்ட்.. அர்ஜென்டினா உலக சாதனை

அவர் கடைசியாக விளையாடியுள்ள ஏழு போட்டியிலே அவர் எத்தகைய பார்மில் இருக்கிறார் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். இந்திய மைதானங்களில் அவரை தடுத்து நிறுத்துவது என்பது நிச்சயம் பவுலர்களுக்கு கடினமான காரியம் தான். ஷாகின் ஷா அப்ரிடி என்னதான் பெரிய பவுலராக இருந்தாலும் விராட் கோலிக்கு எதிராக அவர் என்னைப் பொறுத்தவரை ஒரு டீசன்டான பவுலரே தவிர ஆபத்தான பவுலரெல்லாம் கிடையாது நிச்சயம் விராட் கோலி இன்றைய போட்டியில் அவரை எளிதாக சமாளிப்பார் என ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement