என்னாது 1 சிக்சர் கூட இல்லாம 20 ஓவரில் 427 ரன்களா.. விசித்திர ஸ்கோர்கார்ட்.. அர்ஜென்டினா உலக சாதனை

Argentina
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் நிகழ்த்தப்படும் சாதனைகள் ஒவ்வொரு நாளும் உடைக்கப்படுவது வழக்கமாகும். அதிலும் தரமான டாப் அணிகளை தவிர்த்து இதர அணிகள் விளையாடும் போட்டிகளில் விசித்திரமான சம்பவங்களும் சாதனைகளும் அரங்கேறி வருகின்றன. அந்த கிரிக்கெட்டில் கத்துக்குட்டியாகவே கருதப்படும் அர்ஜென்டினா மற்றும் சிலி நாட்டைச் சேர்ந்த மகளிர் அணிகள் தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகின்றன.

குறிப்பாக அர்ஜென்டினாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிலி அங்கு இந்த தொடரில் களமிறங்கியுள்ளது. அதில் ப்யூனோஸ் அரேஸ் நகரில் அக்டோபர் 13ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற சிலி அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. ஆனால் அதற்கேற்றார் போல் செயல்படாமல் படுமோசமாக பந்து வீசாத அந்த அணியை அடித்து நொறுக்கி துவம்சம் செய்த அர்ஜென்டினா மகளிரணி 20 ஓவரில் 427/1 ரன்கள் குவித்தது.

- Advertisement -

விசித்திர ஸ்கோர்கார்ட்:
அதன் வாயிலாக சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற உலக சாதனையும் அர்ஜென்டினா படைத்தது. இதற்கு முன் சவுதி அரேபியா மகளிரணிக்கு எதிராக பக்ரைன் அணி 318/1 ரன்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும். அந்தளவுக்கு நேரடியாக விளையாடிய அந்த அணிக்கு கேப்டன் லூசியா டெய்லர் மற்றும் அல்பராட்டினா காலன் ஆகிய தொடக்க வீராங்கனைகள் 16.5 ஓவரில் முதல் விக்கெட்டுக்கு 350 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள் என்பது நம்ப முடியாததாக இருக்கிறது.

அதில் லூசியா டைலர் சதமடித்து 27 பவுண்டரிகளுடன் 169 (84) ரன்களில் அவுட்டாக விழுப்புரம் கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய அல்பர்ட்டினா 23 பவுண்டரியுடன் 145* (84) ரன்கள் எடுத்தார். அவருடன் கடைசி நேரத்தில் மரியா 7 பவுண்டரியுடன் 40* (16) ரன்கள் எடுத்தார். ஆனால் இவ்வளவு ரன்கள் அடித்த இந்த 3 வீராங்கனைகளில் யாருமே 1 சிக்சர் கூட அடிக்கவில்லை என்பது மற்றுமொரு விசித்திரமாகும்.

- Advertisement -

மறுபுறம் இந்த அதிகமான ரண்களை அடிக்கும் அளவுக்கு சிலி அணியினர் 64 நோ-பால்களை போட்டதே முக்கிய காரணமாகும். அந்த வகையில் மொத்தமாக அந்த அணி 73 எக்ஸ்ட்ரா ரன்களை கொடுத்து இப்போட்டியில் 30க்கும் மேற்பட்ட ஓவர்களை வீசியதே இவ்வளவு ரன்கள் அர்ஜென்டினா அடிப்பதற்கு காரணமாகும். அப்படி பந்து வீச்சில் தாறுமாறாக அடி வாங்கிய அந்த அணி பேட்டிங்கில் அதை விட மோசமாக செயல்பட்டு 15 ஓவரிலேயே 63 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையும் படிங்க: பாகிஸ்தான் மாதிரி இல்ல பிரதர்.. இந்தியாவில் அப்படி தான் இருக்கும்.. ஹபீஸ்க்கு ஆகாஷ் சோப்ரா பதிலடி

குறிப்பாக 7 அதிகபட்சமாக ஜெசிகா மிரண்டா 27 ரன்கள் எடுக்க அர்ஜென்டினா சார்பில் அதிகபட்சமாக காஸ்டான்சா, அலிசன், மரியானா, அல்பர்டினா, ஜூலிட்டா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். அந்த வகையில் இப்போட்டியில் 364 ரன்கள் வித்தியாசத்தில் அர்ஜென்டினா வென்றது ரசிகர்களால் நம்ப முடியாததாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement