பாகிஸ்தான் மாதிரி இல்ல பிரதர்.. இந்தியாவில் அப்படி தான் இருக்கும்.. ஹபீஸ்க்கு ஆகாஷ் சோப்ரா பதிலடி

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் வரலாற்றிலேயே முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தங்களுடைய முதலிரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் கத்துக்குட்டியான ஆப்கானிஸ்தானை தோற்கடித்து அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றது. அதை தொடர்ந்து அக்டோபர் 14ஆம் தேதி பரம எதிரி பாகிஸ்தானை தன்னுடைய 3வது போட்டியில் இந்தியா எதிர்கொள்கிறது.

அப்படி இந்தியாவில் உலகக்கோப்பை நன்றாகவே நடைபெற்று வரும் நிலையில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் எந்த வழியில் குறை சொல்லலாம் என்று காத்திருந்த தினந்தோறும் விமர்சித்து வருகிறார்கள் என்று சொல்லலாம். குறிப்பாக தரம்சாலா மைதானத்தில் வெளிப்புற களத்தில் அதிகப்படியான குளிர் காரணமாக புற்கள் குறைவாக இருப்பது வீரர்களுக்கு காயத்தை ஏற்படுத்துவதாக இருந்தாலும் அதற்காக அதை குறையாகவும் சாக்காகவும் சொல்லவில்லை என்று இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்தார்.

- Advertisement -

சோப்ரா பதிலடி:
ஆனால் வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லாத அளவுக்கு இந்தியாவில் இருக்கும் மைதானங்கள் இருப்பதாக விமர்சித்த முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் பெரும்பாலான போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் வெறிச்சோடிய மைதானங்களில் நடைபெறுவதாகவும் சொல்லியிருந்தார். அதை விட சென்னையில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய போட்டியில் சுழலுக்கு சாதகமாக இருந்த பிட்ச் நியூசிலாந்து – வங்கதேச அணிகள் மோதிய போட்டியில் பேட்டிங்க்கு சாதகமாக இருந்ததாக அவர் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.

அதாவது இந்தியா தாங்கள் விளையாடும் போட்டிகளில் வேண்டுமென்றே தங்களுக்கு மிகவும் பிடித்த சுழலுக்கு சாதகமான பிட்ச்களை அமைப்பதாக விமர்சித்த அவர் இத்தொடரை ஐசிசி நடத்துகிறதா அல்லது பிசிசிஐ நடத்துகிறதா என்று விரைவில் கண்டுபிடிக்க போவதாக ட்விட்டரில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான பிட்ச்கள் செம்மண் மற்றும் கருமண்ணால் கலந்து தயாரிக்கப்படுவதாக ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

- Advertisement -

எனவே ஒரே மைதானத்தில் 2 நடைபெற்றாலும் அவை இரண்டும் வெவ்வேறு மாதிரியாக இருக்கும் என்றும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானில் எப்படி பெற்று உருவாக்கப்படுகிறது என்று தெரியாது ஆனால் இந்தியாவில் இப்படி தான் தயாரிக்கப்படுகிறது என முகமது ஹபீஸ்க்கு பதிலடி கொடுக்கும் அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

“பிரதர் சென்னையில் ஸ்கொயர் பகுதி (இந்தியாவில் இருக்கும் பல்வேறு மைதானங்களிலும் அப்படி தான்) பிட்ச் தற்போது வித்தியாசமான முன்னாள் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக செம்மண் மற்றும் கருமண்ணால் கலந்து செய்யப்படுகிறது. எனவே வித்தியாசமான மண்ணால் பிட்ச்கள் தயாரிக்கப்படும் போது அவை வித்தியாசமாக எதிரொலிக்கும் என்பது உங்களுக்கு தெரியும். எனவே உலகக்கோப்பை முழுவதும் ஒரே மைதானத்தில் வெவ்வேறு போட்டிகள் நடைபெற்றாலும் அது வெவ்வேறு இருக்கும். அதை பார்த்து ஆச்சரியப்படாதீர்கள்” என்று கூறியுள்ளார்.

Advertisement