ஒருவேளை மும்பை அணி ரோஹித் சர்மாவை வெளியேற்றினால் இதுதான் நடக்கும் – ஹர்பஜன் சிங் கருத்து

Harbhajan
- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா நடைபெற்று முடிந்த 2024 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக அந்த அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதனை தொடர்ந்து புதிய கேப்டனாக ஹார்டிக் பாண்டியா தலைமையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் விளையாடிய மும்பை அணி கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது. இதன் காரணமாக நிச்சயம் மும்பை அணியில் அடுத்த ஆண்டு சில முக்கிய மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரோஹித் சர்மா ஏலத்திற்கு வந்தால் இதுதான் நடக்கும் :

ஏற்கனவே கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ரோகித் சர்மா சில போட்டிகளில் இம்பேக்ட் பிளேயராகவும் விளையாடியதால் மெகா ஏலத்திற்கு முன்னதாக மும்பை அணியால் தக்கவைக்கப்படுவாரா? அல்லது வெளியேற்றப்படுவாரா? என்ற சந்தேகம் இருந்து வருகிறது.

- Advertisement -

ஐந்து முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்த சாம்பியன் கேப்டனான ரோகித் சர்மாவை மும்பை அணி அவமானப்படுத்தி வருவதால் அவர் அந்த அணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று ரோகித் சர்மாவின் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை ரோகித் சர்மா மும்பை அணியிலிருந்து வெளியே வந்து ஏலத்திற்கு வந்தால் என்ன நடக்கும் என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் பேசி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் ஒருவேளை ரோகித் சர்மா மும்பை அணியில் இருந்து வெளியேறினால் அவரை ஏலத்தில் எடுக்க அனைத்து அணிகளும் போட்டி போடும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

மும்பை அணியால் ரோகித் சர்மா தக்கவைக்கப்படுவாரா? அல்லது ஏலத்திற்கு வருவாரா? என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன். ஒருவேளை மெகா ஏலத்திற்கு ரோகித் சர்மா வரும் பட்சத்தில் எல்லா அணிகளுமே அவரை வாங்க போட்டி போடும். ஏனெனில் ரோகித் சர்மா ஒரு சாம்பியன் கேப்டன் என்பது மட்டுமின்றி ஒரு மிகச் சிறந்த பேட்ஸ்மேன். தற்போது தனது உச்சகட்ட பார்மில் இருக்கும் அவர் 37 வயதானாலும் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்.

இதையும் படிங்க : இந்தியாவுக்கு சாதகம்.. பார்டர் – கவாஸ்கர் தொடரில் விலக உள்ள ஆஸி ஆல் ரவுண்டர்.. வெளியான தகவல்

என்னை பொறுத்தவரை இன்னும் சில ஆண்டுகள் ரோஹித் சர்மாவால் இதே போன்ற அதிரடியை தொடர முடியும். எனவே நிச்சயம் ரோஹித் சர்மா ஏலத்திற்கு வந்தால் அவரை மிகப் பெரிய தொகைக்கு வாங்க பத்து அணிகளுமே போட்டி போடும் என்று நினைப்பதாக ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement