சி.எஸ்.கே அணி சக்ஸஸா இருக்க காரணமும், ஆர்.சி.பி அணி தடுமாற காரணமும் இதுதான் – ஹர்பஜன் சிங் கருத்து

CSK-vs-RCB
- Advertisement -

நடப்பு 2024 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் கடந்த 16 வருடங்களாக கோப்பையை வெல்லாமல் இருந்து வரும் ஆர்.சி.பி அணியானது இம்முறையாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடி வருகிறது. என்னதான் பெங்களூரு அணியில் பேட்ஸ்மேன்கள் பலமாக இருந்தாலும் பந்துவீச்சாளர்களால் பெங்களூர் அணி தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வருகிறது.

குறிப்பாக கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் போது பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 182 ரன்கள் குவித்தனர். ஆனால் அந்த இலக்கினை கொல்கத்தா அணி 17 ஓவரிலேயே எட்டி மூன்று ஓவர்கள் மிட்சம் வைத்து வெற்றி பெற்றது.

- Advertisement -

அந்த அளவிற்கு ஆர்.சி.பி அணியின் பந்துவீச்சு மோசமாக உள்ளது. இந்நிலையில் ஆர்.சி.பி அணியின் நிர்வாகம் குறித்து சில கருத்துக்களை தெரிவித்த இந்திய அணியில் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் கூறுகையில் :

இந்த பவுலிங் யூனிட்டை வைத்துக்கொண்டு ஐபிஎல் கோப்பையை ஆர்.சி.பி அணி கைப்பற்றுவது கனவிலும் முடியாது என்று கடுமையாக விமர்சித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : உண்மையில் ஆர்சிபி அணியின் நிர்வாகம் அவர்களது அணியின் வீரர்களை பேக்கப் செய்வதில்லை.

- Advertisement -

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் ஷிவம் துபே சிஎஸ்கே அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். ஆனால் ஆர்.சி.பி அணியில் இருக்கும் போது அவரால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. அதேபோன்று ஆர்சிபி அணியில் சோபிக்க தவறிய பல வீரர்கள் சென்னை அணியில் இணையும்போது மிகச் சிறப்பாக விளையாடியிருக்கின்றனர்.

இதையும் படிங்க : இந்தியா கண்டு பிடிச்சுடுச்சு.. 155.80 கி.மீ வேகத்தில் மிரட்டிய மயங் யாதவ் பற்றி.. வைரலாகும் பிரட் லீ’யின் பாராட்டு

அந்த வகையில் உண்மையிலேயே சிஎஸ்கே அணியில் வீரர்களுக்கான ஆதரவு நிறைய இருக்கிறது. ஆனால் ஆர்.சி.பி தங்களது வீரர்களை ஆதரிப்பது கிடையாது. இதுவே சென்னை அணியின் வெற்றிக்கும், பெங்களூரு அணியின் தோல்விக்கும் காரணமாக உள்ளது என ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement