இந்தியா கண்டு பிடிச்சுடுச்சு.. 155.80 கி.மீ வேகத்தில் மிரட்டிய மயங் யாதவ் பற்றி.. வைரலாகும் பிரட் லீ’யின் பாராட்டு

- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 11வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய லக்னோ தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது. மார்ச் 30ம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 200 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக குயிண்டன் டீ காக் 54, நிக்கோலஸ் பூரான் 42, க்ருனால் பாண்டியா 43* ரன்கள் எடுத்தனர்.

அதைச் சேசிங் செய்த பஞ்சாப் முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 178/5 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. அந்த அணிக்கு துவக்க வீரர்கள் கேப்டன் ஷிகர் தவான் 70 – ஜானி பேர்ஸ்டோ 42 ரன்கள் அடித்து 102 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். ஆனால் அப்போது அனலாக பந்து வீசிய மயங் யாதவ் 3 விக்கெட்டுகளை எடுத்து போட்டியை தலைகீழாக மாற்றினார்.

- Advertisement -

பிரட் லீ பாராட்டு:
குறிப்பாக வெறும் 21 வயதாகும் அவர் இந்த போட்டியில் தான் அறிமுகமாக களமிறங்கினார். அந்த வாய்ப்பில் ஆரம்பம் முதலே 145 – 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசிய அவர் இங்கிலாந்து வீரரான ஜானி பேர்ஸ்டோவை முதல் விக்கெட்டாக எடுத்தார். அப்படியே ஷிகர் தவானுக்கு எதிராக 155.80 கி.மீ என்ற உச்சகட்டமான வேகத்தில் ஒரு பந்தை வீசிய அவர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

அதன் வாயிலாக இந்த வருட ஐபிஎல் தொடரில் அதிவேகமான பந்தை வீசிய பவுலர் என்ற மிரட்டலான சாதனையையும் மயங் யாதவ் படைத்துள்ளார். அதே சமயம் நல்ல லைன், லென்த் ஆகியவற்றையும் பின்பற்றி பந்து வீசிய அவர் 4 ஓவரில் 27 ரன்கள் மட்டும் கொடுத்து 6.8 என்ற எக்கனாமியில் துல்லியமாக செயல்பட்டு பஞ்சாப்பின் வெற்றியைப் பறித்ததால் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

இந்நிலையில் மயங் யாதவ் பற்றி ஆஸ்திரேலியா முன்னாள் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இந்தியா தனது வேகப்பந்து வீச்சாளரை கண்டு பிடித்துள்ளது. மயங் யாதவ், மிரட்டலான வேகம். மிகவும் ஈர்க்கக் கூடியதாக இருக்கிறது” என்று கூறியுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: யாரு சாமி நீ.. 155.80 கி.மீ வேகத்தில்.. பும்ரா, உம்ரான் மாலிக் ஓரங்கட்டிய மயங் யாதவ்.. மாஸ் சாதனை

பொதுவாகவே 150 கிலோ மீட்டர் வேகத்தில் தொடர்ந்து வீசக்கூடிய பிரட் லீ போன்ற பவுலர் கிடைக்க மாட்டாரா என்பது இந்திய ரசிகர்களின் நீண்ட நாள் கனவாகும். அதை ஈடு செய்யும் வகையில் இதே ஐபிஎல் தொடரில் உம்ரான் மாலிக் அசத்தலாக செயல்பட்டார். ஆனால் வேகத்தை மட்டுமே நம்பி ரன்களை வாரி வழங்கிய அவர் தற்போது இந்திய அணியில் கழற்றி விடப்பட்டுள்ளார். ஆனால் மயங் யாதவ் நல்ல வேகத்துடன் விவேகமாக பந்து வீசும் திறமையை கொண்டுள்ளார். எனவே இந்தியாவுக்கு தம்மை போன்ற தரமான வேகப்பந்து வீச்சாளர் கிடைத்துள்ளதாக ப்ரட் லீ மறைமுகமாக பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement