- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அதை செய்யாத கம்பீர் மேல எல்லா பழியையும் போடாதீங்க.. ஆஸியில் சோதனை காத்திருக்கு.. ஹர்பஜன் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். இருப்பினும் அவருடைய தலைமையில் இலங்கைக்கு எதிராக 27 வருடங்கள் கழித்து ஒருநாள் தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதை விட சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் முதல் முறையாக இந்தியா ஒய்ட் வாஸ் தோல்வியை பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது.

அந்த தோல்விகளுக்கு கௌதம் கம்பீர் முக்கிய காரணமாக அமைந்ததாக இந்திய ரசிகர்களே விமர்சித்து வருகிறார்கள். இதற்கிடையே சுமாரான பார்மில் இருக்கும் விராட் கோலி அடுத்து நடைபெறும் ஆஸ்திரேலியா தொடரில் நன்றாக செயல்பட வேண்டும் என்று ரிக்கி பாண்டிங் சமீபத்தில் கூறியிருந்தார். ஆனால் அப்படி கூறுவதற்கு ரிக்கி பாண்டிங் யார் என்று கௌதம் கம்பீர் அதிரடியான பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

கம்பீருக்கு ஆதரவு:

அதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தியாவின் தோல்விகளுக்கு கௌதம் கம்பீர் மீது பழி போடுவது சரியல்ல என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கௌதம் கம்பீர் பயிற்சியாளராக வந்தது முதல் அவர் களத்திற்கு பேட்டிங் செய்யவோ பவுலிங் செய்யவோ செல்லவில்லை. ஆனால் திடீரென இந்திய அணி தோல்விகளை சந்தித்தது”

“அதனால் காண மொத்த பழியும் கௌதம் கம்பீர் மேலே போடப்பட்டது. உண்மையில் அவர் பேட்டிங் அல்லது பவுலிங் செய்யவில்லை என்பதால் பழி சொல்ல முடியாது. நீங்கள் சுழலுக்கு சாதகமான மைதானங்களை அமைத்தது உங்களுக்கே தோல்வியை கொடுத்தது. அவரைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவர் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதை இதயத்தில் இருந்து நினைக்கக்கூடியவர்”

- Advertisement -

பழி போடாதீங்க:

“அவர் எப்போதும் அணியின் வெற்றி உண்மையாக சிந்திக்கக் கூடியவர். எனவே இப்போதே அவரைப் பற்றி மதிப்பிடுவது அதிகப்படியானது அவருக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள். பெரிய அணிகளுக்கு எதிராக வெல்வது எளிதல்ல. ஒருவேளை இந்தியா வென்றிருந்தால் கௌதம் கம்பீர் நம்முடைய அணியை வெற்றி பெற வைத்துள்ளார் என்று மக்கள் பேசியிருப்பார்கள். அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் முக்கியமானது”

இதையும் படிங்க: ஆஸ்திரேலியாவில் கடைசியா நீங்க இதை செய்யனும்.. விராட் கோலிக்கு 2014 ரசிகனாக மிட்சேல் ஜான்சன் கோரிக்கை

“அங்கே களத்திற்கு வெளியே அமர்ந்திருக்கும் கௌதம் கம்பீரின் அமைதி, கோபம் ஆகியவை சோதிக்கப்படும். வெளியே உட்கார்ந்து கொண்டு அவரால் எதையும் கட்டுப்படுத்த முடியாது. எனவே இந்த சோதனையை கம்பீர் தாண்ட வேண்டும். அவருக்கு இது முக்கியமான சுற்றுப்பயணம். ஒருவேளை இந்த தொடரும் சரியாக செல்லவில்லையெனில் அவர் விமர்சனங்களை சந்திப்பார். எனவே அணி நன்றாக செயல்படுவதற்கு அவர் அமைதியுடன் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -