- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இளம் இந்திய அணி சீக்கிரம் உலகையே தோற்கடிக்கும்.. அவர் தான் வருங்காலத் தூணா இருப்பாரு.. ஹர்பஜன் ஆதரவு

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வரலாற்றிலேயே முதல் முறையாக 5 சதங்கள் இந்தியா சாதனை படைத்தது. ஆனால் 7 கேட்ச்கள் தவற விட்டதால் பரிதாபமாக தோற்ற இந்தியா 2வது போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து தக்க பதிலடி கொடுத்தது.

3வது போட்டியிலும் ரிஷப் பண்ட் ரன் அவுட்டானது போன்ற சிறிய தவறுகளால் இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. உண்மையில் விராட் ரோஹித், ஆகியோர் ஓய்வு பெற்றதால் தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்தில் திண்டாடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இளம் இந்திய அணி பயமின்றி பஸ்பால் இங்கிலாந்தை மெதுவாக விளையாட வைத்து சவாலைக் கொடுத்து வருகிறது என்றே சொல்லலாம்.

- Advertisement -

உலகை மிரட்டப்போகும் இந்தியா:

இந்நிலையில் இளம் இந்திய அணி வருங்காலங்களில் உலகின் அனைத்து எதிரணிகளையும் மிரட்டி தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவிக்கும் என்று ஹர்பஜன் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். கேப்டன் சுப்மன் கில் வருங்காலங்களில் இந்திய அணியின் தூணாக இருப்பார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “போட்டி முடிவுகள் நம்முடைய அணியின் தரத்தை தீர்மானிக்காது”

“இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்பாகவே நம்முடைய அணியை ஆரம்பத்திலேயே மதிப்பிடாதீர்கள் என்று சொன்னேன். இந்த இளம் இந்திய அணி உலகைத் தோற்கடிக்கும் அணியாக மாறும். அதற்கு எடுத்துக்காட்டாக பர்மிங்காம் மைதானத்தில் முதல் முறையாக வென்றது அற்புதமானது. லார்ட்ஸ் மைதானத்திலும் வெற்றியை நெருங்கிய அவர்கள் இத்தொடரில் நிறையக் கற்றுக்கொண்டு அதை வருங்காலத்தில் சாதகமாக பயன்படுத்துவார்கள்”

- Advertisement -

ஹர்பஜன் ஆதரவு:

“எனவே நாம் இளம் அணியை விரைவாக மதிப்பிடக்கூடாது. பெரிய பிளேயரான சுப்மன் கில் இந்திய அணிக்காக நீண்ட வருடங்கள் தூணாக இருப்பார். இங்கிலாந்தில் எத்தனை இந்திய பேட்ஸ்மேன்கள் (ஒரே போட்டியில் 430 ரன்கள் அடித்து) தங்களது முத்திரையைப் பதித்துள்ளார்கள். எனவே சர்வதேச கிரிக்கெட்டில் அசத்துவதற்கான திறமையைக் கொண்டுள்ள அவரை சந்தேகிக்காதீர்கள்”

இதையும் படிங்க: ரிஷப் பண்டிற்கு பதிலாக 4 ஆவது போட்டியில் துருவ் ஜுரேல் தான் ஆடப்போறாரா? பயிற்சியில் நடந்த நிகழ்வு – விவரம் இதோ

“தனது தந்தையுடன் சேர்ந்து நிறைய உழைத்துள்ள அவருடைய அடிப்படைகள் நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு வீரர்களின் முறைகள், குணங்கள் வித்தியாசமாக இருக்கும். அதனால் கங்குலி, கோலி, தோனி போல கில் இருக்க முடியாது. கில் தனக்கென்று ஒரு தொலைநோக்குப் பார்வையை வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான திறமையைக் கொண்டுள்ள சுப்மன் கில் இந்திய அணியை நன்றாக தலைமை தாங்கப்போவது மட்டுமின்றி இந்திய கிரிக்கெட்டை உலகின் உச்சத்திற்கு எடுத்துச் செல்வார்” என்று கூறினார்.

- Advertisement -