நான் மட்டும் டெல்லி அணியில் இருந்திருந்தா அடி வெளுத்திருப்பேன்.. ப்ரித்வி ஷாவை கடுமையாக சாடிய – ஹர்பஜன் சிங்

Harbhajan-and-Prithvi
- Advertisement -

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நேற்று லக்னோ நகரில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 26-வது லீக் போட்டியில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை குவித்தது.

பின்னர் 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது 18.1 ஓவரில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருந்த டெல்லி அணியானது தற்போது ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

- Advertisement -

இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற மிக முக்கியமான காரணமாக அறிமுக வீரராக களமிறங்கிய ஜாக் பிரேசர் மற்றும் கேப்டன் ரிஷப் பண்ட் ஆகியோரது ஆட்டம் அமைந்தது. ஏனெனில் 63 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த டெல்லி அணி சார்பாக மூன்றாவது விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் சேர்ந்து 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.

ஜாக் பிரேசர் 55 ரன்களையும், ரிஷப் பண்ட் 41 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டியின் போது துவக்க வீரராக களமிறங்கிய பிரிதிவி ஷா 22 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஒரு கட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடி வந்த அவர் பவர்பிளே முடிந்ததும் ரவி பிஷ்னாய் ஓவரில் தேவையில்லாத ஷாட்டை விளையாடி ஆட்டமிழந்தது அந்த அணிக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்நிலையில் அவரது இந்த இன்னிங்ஸை கடுமையாக சாடியுள்ள ஹர்பஜன் சிங் கூறுகையில் : களத்தில் ப்ரித்வி ஷா என்ன செய்து வருகிறார் என்பதை அனைவரும் கவனிக்க வேண்டும். நான் மட்டும் டெல்லி அணியின் நிர்வாகத்தில் இருந்திருந்தால் நிச்சயம் ப்ரித்வி ஷாவை அடித்திருப்பேன். ஏனெனில் ஒரு நல்ல இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் போது அதனை பெரிய இன்னிங்ஸ்ஸாக மாற்ற வேண்டும்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்து மிரளவைத்த 22 வயது ஆஸ்திரேலிய வீரர் – யார் இவர்? (விவரம் இதோ)

அதை விட்டுவிட்டு தேவையில்லாத ஷாட்டை விளையாட வேண்டிய அவசியமே கிடையாது. எப்போதுமே அவர் நன்றாக பேட்டிங் செய்யும்போதே ஒரு மோசமான ஷாட்டை விளையாடி ஆட்டமிழப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அதனை ப்ரித்வி ஷா மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஹர்பஜன் சிங் சாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement