ஐ.பி.எல் அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்து மிரளவைத்த 22 வயது ஆஸ்திரேலிய வீரர் – யார் இவர்? (விவரம் இதோ)

Jack-Fraser-Mcgurk
- Advertisement -

கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கிய நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி இரண்டு வெற்றிகளுடன் 4 புள்ளிகளை பெற்று 9-வது இடத்தை பிடித்துள்ளது. முதல் ஐந்து போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று பெரும் பின்னடைவை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சந்தித்திருந்தது.

இவ்வேளையில் ஏப்ரல் 12-ஆம் தேதி லக்னோ நகரில் நடைபெற்ற 26-வது லீக் போட்டியில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது லக்னோ அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை குவித்தது. பின்னர் 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 18.1 ஓவரில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 170 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது டெல்லி அணியின் சார்பாக அறிமுகப் வீரராக களமிறங்கிய ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த 22 வயதான இளம் வீரர் ஜாக் பிரேஸர் மெக்கர்க் 35 பந்துகளை சந்தித்து இரண்டு பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 55 ரன்கள் குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரின் அறிமுகப் போட்டியிலே அரைசதம் அடித்த அவர் குறித்த கேள்வியும் பலரது மத்தியிலும் எழுந்துள்ளது. அந்தவகையில் அவர் குறித்த சில தகவல்களை இந்த பதிவில் காணலாம். ஆஸ்திரேலிய அணிக்காக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகமான அதிரடி ஆட்டக்காரரான அவர் இதுவரை 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதையும் படிங்க : இவ்வளவு சீக்கிரம் ஃபிட்டாகி ஆட்டநாயகன் விருது வென்றதற்கான பாராட்டு அவரை சேரும்.. குல்தீப் பேட்டி

பிக் பேஷ் தொடரிலும் அட்டகாசமாக ஆடிய அவர் தற்போது மாற்றுவீரராக ஐ.பி.எல் தொடருக்கான டெல்லி அணியிலும் இடம்பிடித்து விளையாடி வருகிறார். அதோடு ஐ.பி.எல் தொடரின் அறிமுகப்போட்டியில் தான் எதிர்கொண்ட இரண்டாவது பந்தில் சிக்ஸரையும், அதன் பிறகு சில பந்துகள் கழித்து மீண்டும் ஒரு சிக்ஸர் என முதல் ரன்களையே இரண்டு சிக்ஸர்கள் மூலம் விரட்டி அசத்தினார். அதுமட்டும் இன்றி சர்வதேச லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 29 பந்துகளில் சதம் அடித்த வீரர் என்ற ஒரு பெருமையும் இவரிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement