இவ்வளவு சீக்கிரம் ஃபிட்டாகி ஆட்டநாயகன் விருது வென்றதற்கான பாராட்டு அவரை சேரும்.. குல்தீப் பேட்டி

Kuldeep yadav
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற்ற 26வது லீக் போட்டியில் லக்னோவை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த டெல்லி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவரில் போராடி 167/7 ரன்கள் எடுத்தது. குறிப்பாக கேப்டன் கேஎல் ராகுல் 39, டீ காக் 19, பூரான் 0, ஸ்டோய்னிஸ் 8 என அந்த அணிக்கு முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் 94/7 என தடுமாறிய அணிக்கு அதிகபட்சமாக இளம் வீரர் ஆயுஸ் படோனி 55* (35) ரன்களும் அர்சத் கான் 20* (16) ரன்களும் அடித்து ஓரளவு காப்பாற்றினர். டெல்லி சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3, கலீல் அகமது 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 168 ரன்களை துரத்திய டெல்லிக்கு பிரிதிவி ஷா 32, கேப்டன் ரிஷப் பண்ட் 41, ஜேக் ப்ரேஷர்-மெக்குர்க் 55 ரன்களை அதிரடியாக எடுத்தனர்.

- Advertisement -

வேகமான கம்பேக்:
அதன் காரணமாக 18.1 ஓவரிலேயே இலக்கை எட்டிய டெல்லி 6 போட்டியில் தங்களுடைய 2வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. அதனால் லக்னோ முதல் முறையாக ஒரு ஐபிஎல் போட்டியில் 160+ ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் பரிதாபமாக தோல்வியை சந்தித்தது. டெல்லியின் இந்த வெற்றிக்கு மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரான், கேப்டன் கேஎல் ராகுல் ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்த குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக ஆட்டநாயகன் விருதை வென்றார்.

கடந்த சில போட்டிகளில் காயத்தால் விளையாடாத அவர் இப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றது பற்றி பேசியது பின்வருமாறு. “ஃபிட்டாக இல்லாதது மிகவும் கடினமாக இருந்தது. முதல் போட்டியிலேயே காயமடைந்த எனக்கு அதற்கடுத்த போட்டிகளில் மிடில் ஓவர்களில் டெல்லி தடுமாறியதை பார்த்தது கடினமாக இருந்தது”

- Advertisement -

“இருப்பினும் நான் விரைவாக குணமடைந்து விளையாடியதற்கான பாராட்டுக்கள் உடற்பயிற்சியாளர் பட்ரிக் பர்ஹர்ட்டுக்கு செல்ல வேண்டும். நான் எடுத்த 3 விக்கெட்டுகளும் முக்கியமானது. அதை மிடில் ஓவர்களில் எடுத்ததால் ரன் ரேட் கட்டுக்குள் வந்தது. பூரானுக்கு எதிராக நான் அதிகம் விளையாடியுள்ளேன். எனவே அவருக்கு எதிரான என்னுடைய திட்டம் சரியாக இருந்தது. எனது திட்டங்களில் நான் தெளிவாக இருக்கிறேன்”

இதையும் படிங்க: அவரால எல்லா ஊர்லயும் சப்போர்ட் கிடைக்குது.. தோனி 2011இல் சொன்னதை இப்போவும் சொல்றாரு.. ரஹானே பேட்டி

“ஒரு ஸ்பின்னராக எனக்கு லென்த் முக்கியம். என்னுடைய திறமையில் தெளிவு மற்றும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறேன். டிஆர்எஸ் எடுக்கும் போது 50 – 50 என்று உணர்ந்தால் அதை எடுக்க வற்புறுத்துவேன். 60 – 40 என்ற சூழ்நிலையில் ரிஷப் பண்ட் பேச்சை கேட்பேன். பவுலராக நீங்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் டிஆர்எஸ் எடுக்க விரும்புவீர்கள். என

Advertisement