நீங்க சொல்ற மாதிரி அவரு பெரிய பிளேயர்லாம் இல்ல. அவரு ஒரு சொதப்பல் வீரர் – ஹர்பஜன் சிங் விமர்சனம்

Harbhajan
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 13-வது ஐசிசி ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணியானது இம்முறை மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் இந்த தொடரை அவர்கள் மிகவும் சுமாராகவே துவங்கியுள்ளனர்.

அந்த வகையில் இந்த நடப்பு உலக கோப்பை தொடரில் தங்களது முதல் லீக் போட்டியில் இந்திய அணியை எதிர்த்து விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 199 ரன்களை மட்டுமே குவித்தது. பின்னர் தொடர்ந்து விளையாடிய இந்திய அணியானது 4 விக்கெட்டுகளை இழந்தாலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை அவர்களுக்கு எதிராக பதிவு செய்தது.

- Advertisement -

இதன் மூலம் 1992-ஆம் ஆண்டிற்கு பிறகு உலகக் கோப்பை தொடரில் தாங்கள் விளையாடிய முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை சந்தித்து மோசமான நிலையை பெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாவதாக நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அவர்களிடத்திலும் தோல்வியை சந்தித்து இருந்தது.

அந்த போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது 311 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலியா 177 ரன்கள் மட்டுமே குவித்து 134 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் உலக கோப்பை வரலாற்றில் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து அந்த அணி பெரிய பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில் நேற்று இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்றாவது போட்டியிலே அவர்கள் வெற்றி பெற்று தற்போது மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணியாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் முதல் இரண்டு போட்டியிலும் சோபிக்காமல் தற்போது இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியிலேயே ஓரளவு சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் மேக்ஸ்வெல்லின் இந்த செயல்பாடு குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் கூறுகையில் : மேக்ஸ்வெல்லை எல்லோரும் “பிக் ஷோ” என்று கூறுகிறார்கள்.

இதையும் படிங்க : அம்பயரை கண்டபடி திட்டிக்கொண்டே மைதானத்தில் இருந்து வெளியேறிய டேவிட் வார்னர் – நடந்தது என்ன?

ஆனால் அவர் உண்மையிலேயே என்னை பொறுத்தவரை அவர் ஒரு “பிலாப் ஷோ” இந்த வார்த்தைகள் தான் அவருக்கு சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவர் தனது பார்மை கண்டுபிடிக்க கடுமையாக போராடி வருகிறார் என ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார். அவர் கூறியது போன்றே நேற்றைய இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அவர் ஓரளவு சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது போட்டியில் 25 பந்துகளில் 15 ரன்களையும், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 17 பந்துகளில் 3 ரன்களையும் எடுத்து மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement