WTCFinal : பயப்படாதீங்க. இந்த பிட்ச்ல நமக்கும் எந்த கஷ்டமும் இருக்காது. இவங்க 2 பேரும் அசத்துவாங்க – ஹர்பஜன் சிங் சப்போர்ட்

Harbhajan
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது நேற்று ஜூன் 7-ஆம் தேதி லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தற்போது ஆஸ்திரேலியா அணியானது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.

Travis Head

- Advertisement -

நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 327 ரன்களை குவித்துள்ள ஆஸ்திரேலிய அணியானது இன்று தங்களது இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாட உள்ளது. நேற்றைய ஆட்டநேர முடிவில் டிராவிஸ் ஹெட் 146 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 95 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்.

இரண்டாம் நாளான இன்றும் அவர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடி பெரிய ரன் குவிப்பிற்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி பெரிய ஸ்கோரை குவிக்கும் என்பதனால் இந்திய அணி சற்று பின்னடைவு சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Gill and Kohli

இந்நிலையில் இந்த லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் வீரர்கள் பேட்டிங் செய்யவும் எந்த ஒரு கஷ்டமும் இருக்காது என்று ஹர்பஜன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

ஓவல் மைதானம் பேட்டிங்-க்கு நன்கு ஒத்துழைக்கும் மைதானமாக இருந்து வருகிறது. இந்திய அணி வீரர்களும் இங்கு எந்த சிரமமும் இன்றி ரன்களை குவிப்பார்கள். அதிலும் குறிப்பாக சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகியோரது நல்ல பார்ம் நிச்சயம் அவர்களுக்கு உதவும். கண்டிப்பாக இந்திய வீரர்களும் இந்த மைதானத்தில் ரன்களை விளாசுவார்கள்.

இதையும் படிங்க : WTC Final : ஆரம்பத்திலேயே பயந்துட்டீங்க அதான் அதிர்ஷ்டத்தை கோட்டை விட்டிங்க – ரோஹித் சர்மாவை விமர்சித்த பரூக் என்ஜினியர்

இந்த போட்டியில் டாஸ் மட்டுமே நமக்கு சாதகமாக இருந்தது மற்றபடி அனைத்துமே ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக இருந்து வருகிறது. இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் மைதானத்தின் தன்மையை சரியாக பயன்படுத்தவில்லை என்றே கூறுவேன். புதுப்பந்தில் இந்திய வீரர்கள் தங்களது லைன் மற்றும் லென்த் ஆகியவற்றை பிடித்து பந்துவீச தவறி விட்டார்கள் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement