WTC Final : ஆரம்பத்திலேயே பயந்துட்டீங்க அதான் அதிர்ஷ்டத்தை கோட்டை விட்டிங்க – ரோஹித் சர்மாவை விமர்சித்த பரூக் என்ஜினியர்

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்தில் இருக்கும் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 7ஆம் தேதி துவங்கிய 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் நாளிலேயே சுமாராக செயல்பட்ட இந்திய பவுலர்களை அற்புதமாக எதிர்கொண்டு 327/3 ரன்கள் குவித்து வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது. அந்த அணிக்கு உஸ்மான் கவாஜா டக் அவுட்டானாலும் டேவிட் வார்னர் 43 மார்னஸ் லபுஸ்ஷேன் 26 என முக்கிய பேட்ஸ்மேன்கள் நல்ல ரன்களை எடுத்தனர்.

- Advertisement -

அவர்களை விட முதல் நாள் உணவு இடைவெளிக்கு முன் ஜோடி சேர்ந்து கடைசி வரை அவுட்டாகாமல் இந்திய பவுலர்கள் விழி பிதுங்கும் அளவுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் ஃபைனலில் சதமடித்த முதல் வீரராக சாதனை படைத்து 146* ரன்கள் எடுத்தார். அவருடன் மறுபுறம் 4வது விக்கெட்டுக்கு 251 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து சதத்தை நெருங்கிய ஸ்டீவ் ஸ்மித் 95 ரன்கள் எடுத்தார். அதனால் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறுவது கடினமாக பார்க்கப்படுவதால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

தைரியம் இல்ல:
முன்னதாக இப்போட்டியில் வானிலையை கருத்தில் கொண்டு தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் அஸ்வினை கழற்றி விட்ட ரோகித் சர்மாவின் முடிவு இதுவரை எந்த பலனையும் கொடுக்காததால் உச்சகட்ட விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அதை விட பொதுவாக ஐசிசி ஃபைனல்களில் சேசிங் செய்வது மிகவும் சவாலான ஒன்றாகும். அதனால் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்று முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்களை குவித்தால் அழுத்தம் என்பது தாமாகவே எதிரணி பக்கம் திரும்பி விடும் என்று தெரிவித்த முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தாமாக இருந்தால் முதலில் பந்து வீசியிருக்க மாட்டேன் என்று ரோகித் சர்மாவின் முடிவை விமர்சித்தார்.

Rohit

இந்நிலையில் ஸ்விங் வேகத்துக்கு சாதகமான சூழ்நிலையில் முதலில் பேட்டிங் செய்தால் பட் கமின்ஸ், மிட்சேல் ஸ்டார்க் போன்ற தரமான ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களிடம் திணறி விடுவோம் என்ற பயத்தாலேயே தைரியமில்லாமல் ரோகித் சர்மா டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்றும் முதலில் பந்து வீச தீர்மானித்ததாக முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பரூக் இன்ஜினியர் கடுமையாக விமர்சித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்தியா டாஸ் வென்றும் முதலில் பந்து வீச தீர்மானித்துள்ள முடிவு சற்று ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை பச்சை புற்களுடன் கூடிய ஓவல் பிட்ச்சில் ஆஸ்திரேலியாவின் தரமான பவுலிங் அட்டாக்கில் நம்முடைய பலவீனம் வெளிப்பட்டு திணறி விடுவோம் என்று இந்திய பேட்ஸ்மேன்கள் நினைத்திருக்கலாம். அதனால் இந்த முடிவை எடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். இந்த சமயத்தில் நாம் முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் எதிரணிக்கு அச்சுறுத்தலை கொடுப்பார்கள் என்று நம்புவோம். எப்படி இருந்தாலும் இந்த முடிவு மோசமான முடிவல்ல. ஆனால் அதீத தைரியமான முடிவு”

Engineer

“அதே போல் நம்முடைய பேட்டிங் வரிசையில் புஜாரா துருப்புச் சீட்டாக செயல்படக்கூடிய வீரர். மேலும் விராட் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இருப்பதால் நம்முடைய பேட்டிங் வரிசை சிறப்பாக இருக்கிறது. எனவே அனைத்து துறைகளிலும் அசத்தக்கூடிய வீரர்களை கொண்டுள்ள நாம் வெற்றிக்கு சிறப்பாக செயல்பட வேண்டும்” என்று கூறினார். இந்த சூழ்நிலையில் ரோகித் சர்மா எதிர்பார்த்தது போல் இந்திய பவுலர்கள் சிறப்பாக அல்லாமல் மோசமாக செயல்படுவதே இந்த தடுமாற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க:WTC Final : ஆஸி அணியில் அவ்ளோ லெப்ட் ஹேண்டர்ஸ் இருந்தும் – அஸ்வினை எடுக்காத ரோஹித்தை விளாசும் ஜாம்பவான் வீரர்

குறிப்பாக ஷமி மற்றும் சிராஜ் ஆகியோர் புதிய பந்தை தவிர்த்து எஞ்சிய தருணங்களில் சுமாராகவே பந்து வீசி வருகிறார்கள். அத்துடன் அதிரடியாக விளையாடும் டிராவிஸ் ஹெட் போல ஆஸ்திரேலிய பவுலர்களை தெறிக்க விடக்கூடிய திறமை கொண்ட ரிஷப் பண்ட் இப்போட்டியில் இல்லாததும் இந்தியாவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement