- Advertisement -
ஐ.பி.எல்

அந்த டீம்ல இருக்கும் 11 பேரும் மேட்ச் வின்னர் தான்.. அவங்களுக்கு தான் ஐ.பி.எல் கப் – ஹர்பஜன் சிங் கருத்து

கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கிய நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான 18 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக முன்னேறி வருகிறது. இந்த தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும்? எந்த அணி இறுதிப் போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகிறது என்பது குறித்த விவாதங்களும், எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு கோப்பையை ஜெயிக்கபோகும் அணி இதுதான் : ஹர்பஜன் சிங்

இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் போன்ற அணிகள் முதல் நான்கு இடங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அதே வேளையில் தொடரின் ஆரம்பத்தில் பின்தங்கியிருந்த மும்பை அணி தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

- Advertisement -

குறிப்பாக கடைசியாக நடைபெற்ற ஆறு போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற அவர்கள் புள்ளி பட்டியலில் பின்தங்கிய நிலையில் இருந்து முதலாம் இடம் பிடித்து அசத்தியுள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை கைப்பற்றப்போகும் அணி மும்பை இந்தியன்ஸ் தான் என்றும் அந்த அணியில் உள்ள 11 வீரர்களும் மேட்ச் வின்னர்கள் என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வெல்லவில்லை என்றால் வேறு அணியும் எந்த அணியும் வெல்லாது. அந்த அளவிற்கு அவர்கள் தற்போது அசைக்க முடியாத அணியாக உருவெடுத்துள்ளனர்.

- Advertisement -

குறிப்பாக பும்ரா ஒருவரை பற்றி மட்டும் நான் சொல்லவில்லை அந்த அணியில் பும்ராவை தவிர்த்து போல்ட், சாகர், வில் ஜாக்ஸ், பாண்டியா, கரன் சர்மா, கார்பின் போஷ் என பலரும் பந்துவீசி வருகின்றனர். அதுமட்டும் இன்றி டாப் ஆர்டர் முதல், மிடில் ஆர்டர், பின்வரிசை என பேட்டிங்கிலும் அந்த அணி பலமாக உள்ளது.

இதையும் படிங்க : இந்த வாய்ப்பை மட்டும் நிர்வாகம் கொடுத்தா.. நான் மீண்டும் இந்திய அணிக்கு விளையாட தயார் – புஜாரா விருப்பம்

எனவே என்னை பொறுத்தவரை மும்பை அணியில் உள்ள 11 பேரும் மேட்ச் வின்னர்கள் தான். ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது சரியான திசையில் திரும்பி மீண்டும் வெற்றி பாதைக்கு வந்துள்ளது எனவே அவர்களே இந்த ஆண்டு கோப்பையை வெல்வார்கள் என ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -