இந்த வாய்ப்பை மட்டும் நிர்வாகம் கொடுத்தா.. நான் மீண்டும் இந்திய அணிக்கு விளையாட தயார் – புஜாரா விருப்பம்

Pujara
- Advertisement -

இந்தியாவில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 18 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இன்னும் சில வாரங்களில் நிறைவடைய உள்ளது. அதன்பிறகு இந்திய அணியானது அடுத்தாக இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்னும் சில நாட்களில் இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ-யின் மூலம் வெளியாகும் என்று தெரிகிறது.

எனக்கு வாய்ப்பு குடுத்தா அசத்துவேன் : புஜாரா

ஐபிஎல் தொடருக்கு பின்னர் நடைபெற இருக்கும் இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் முதல் தொடர் என்பதனால் இந்த தொடரில் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்து அனுப்ப வேண்டும்? எப்படி வீரர்களை தேர்வு செய்தால் இந்திய அணி வெற்றி பெறும்? என்பது குறித்த ஆலோசனைகளை தற்போதே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடர் முடிவடைந்த கையோடு பல இளம் வீரர்களுக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் இந்திய அணியில் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடிய தனக்கு மீண்டும் நிர்வாகம் வாய்ப்பளித்தால் இந்திய அணியின் வெற்றிக்கு உதவ தயார் என்று புஜாரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

இந்திய அணிக்கு என்னுடைய தேவை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வேண்டும் என்று எனக்கு வாய்ப்பு அளித்தால் நான் நிச்சயம் அதற்கு தயாராக இருக்கிறேன். தற்போதும் நான் உடற்தகுதியில் நல்ல கவனத்தை செலுத்தி வருகிறேன். அதேபோன்று தொடர்ச்சியாக உள்ளூர் மற்றும் கவுண்டி போட்டிகளில் விளையாடி வருகிறேன்.

- Advertisement -

இந்திய அணி கடைசி 20 ஆண்டுகளில் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றவில்லை. ஒருவேளை இம்முறை எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் இந்திய அணியின் வெற்றிக்கு உதவுவேன் என புஜாரா கூறியுள்ளார். கடந்த 2024-25 ரஞ்சி தொடரில் சவுராஷ்டிரா அணிக்காக 7 போட்டிகளில் விளையாடிய புஜாரா அதிகபட்சமாக 234 ரன்களுடன் 402 ரன்களை குவித்திருந்தார்.

இதையும் படிங்க : சிஎஸ்கே போல.. ராஜஸ்தான் அந்த தரமான பேட்ஸ்மேனை ரிலீஸ் பண்ணி தப்பு பண்ணிட்டாங்க.. கில்கிறிஸ்ட் சாடல்

அதேபோன்று கவுண்டி கிரிக்கெட்டில் 16 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஒரு சதம் மற்றும் 5 அரைசதங்களை குவித்துள்ளார். தற்போது இந்திய டெஸ்ட் அணியின் 3 ஆம் இடத்தில் தடுமாறி வரும் சுப்மன் கில்லுக்கு பதிலாக அவரே விளையாட வேண்டும் என்று ரசிகர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement