சிஎஸ்கே போல.. ராஜஸ்தான் அந்த தரமான பேட்ஸ்மேனை ரிலீஸ் பண்ணி தப்பு பண்ணிட்டாங்க.. கில்கிறிஸ்ட் சாடல்

Adam Gilchrist 2
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளன. அதில் சிஎஸ்கே அணியாவது மோசமான பேட்டிங் செய்த காரணத்தால் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழப்பது ஆரம்பத்திலேயே தெரிந்து விட்டது. ஆனால் ராஜஸ்தான் அணி ஓரளவு 3 துறைகளிலும் நன்றாகவே செயல்பட்டது. இருப்பினும் 11 போட்டிகளில் 8 தோல்விகளை சந்தித்த அந்த அணி 3 வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.

அதன் காரணமாக சென்னையை தொடர்ந்து இந்த வருடம் 2வது அணியாக லீக் சுற்றுடன் ராஜஸ்தான் வெளியேறியுள்ளது. அந்த அணியின் இந்தத் தோல்விக்கு பேட்டிங் துறையில் 439 ரன்கள் அடித்த ஜெய்ஸ்வால் தவிர்த்து யாரும் தொடர்ச்சியாக அசத்தாதது முக்கிய காரணமாக அமைந்தது. அதே போல கேப்டன் சஞ்சு சாம்சன் காயத்தால் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடாதது தோல்வியைக் கொடுத்தது.

- Advertisement -

சிஎஸ்கே போல:

இந்நிலையில் சிஎஸ்கே அணியைப் போலவே ராஜஸ்தான் அணியும் ஏலத்தில் தவறு செய்து விட்டதாக ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். அதிலும் ஜோஸ் பட்லர் போன்ற தரமான பேட்ஸ்மேனை தவற விட்டதே ராஜஸ்தான் அணியின் தோல்விக்குக் காரணம் என்றும் அவர் விமர்சித்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

“சிஎஸ்கே அணி ஏலத்தில் தவறு செய்து விட்டதாக மைக் ஹசி ஒப்புக்கொண்டதை நாம் பார்த்தோம். அதனால் அவர்கள் வெளியே சென்று விட்டனர். அதே போல ஏலத்தில் ஜோஸ் பட்லர் விஷயத்தில் என்ன நடந்தது என்பதில் ராஜஸ்தான் அணியை சேர்ந்த யாராவது ஒருவர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். ராஜஸ்தான் தவறு செய்துள்ளது. அதனாலேயே அவர்கள் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்”

- Advertisement -

தவறிய பட்லர்:

“அவரை வெளியிட்டதற்காக ராஜஸ்தான் அணி தங்களிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன். அது தொடரை மாற்றி அமைத்தத் தவறாகும்” என்று கூறினார். அவர் கூறுவது போல ராஜஸ்தான் அணிக்காக பட்லர் துவக்க வீரராக கடந்த வருடங்களில் அபாரமாக விளையாடி பெரிய ரன்கள் குவித்தார். குறிப்பாக 2022 சீசனில் பட்லர் – ஜெய்ஸ்வால் ஆகியோர் ஜோடி சேர்ந்து எதிரணிகளைப் பந்தாடினர்.

இதையும் படிங்க: சாய் சுதர்சனுக்கு அது நல்லா தெரியும்.. இங்கிலாந்துக்கு செலக்ட் பண்ணுங்க.. இந்திய அணிக்கு சாஸ்திரி அறிவுரை

அதில் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்திய பட்லர் 800க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை வென்று ராஜஸ்தான் ஃபைனல் வரை செல்ல முக்கிய பங்காற்றினார். அப்படிப்பட்ட அவரை ராஜஸ்தான் கடந்த ஏலத்தில் தவற விட்டது. மறுபுறம் இம்முறை 15.75 கோடிகளுக்கு வாங்கிய குஜராத்துக்காக ஜோஸ் பட்லர் 406 ரன்களை அதுவும் மிடில் ஆர்டரில் எடுத்துள்ளார்.

Advertisement