சாய் சுதர்சனுக்கு அது நல்லா தெரியும்.. இங்கிலாந்துக்கு செலக்ட் பண்ணுங்க.. இந்திய அணிக்கு சாஸ்திரி அறிவுரை

Ravi Shatri
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. தற்சமயத்தில் அனைத்து இந்திய வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்கள். அதை முடித்துக்கொண்டு இம்மாத இறுதியில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜுன் மாதம் நடைபெறும் அத்தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் அந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இளம் வீரர் சாய் சுதர்சன் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட வேண்டும் என்று ரவி சாஸ்திரி அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த சுதர்சன் உள்ளூர் மற்றும் டிஎன்பிஎல் தொடரில் அசத்தியதால் ஐபிஎல் தொடரில் குஜராத்துக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். அந்த வாய்ப்பில் 2023 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் அவர் 96 ரன்கள் விளாசி சச்சின் டெண்டுல்கரின் பாராட்டைப் பெற்றார்.

- Advertisement -

சுதர்சனுக்கு வாய்ப்பு:

அதன் காரணமாக தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் அறிமுகமான சாய் சுதர்சன் இந்தியாவுக்காக அரை சதத்தை அடித்து அசத்தினார். தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் இந்த வருடம் 504* ரன்கள் விளாசி நல்ல ஃபார்மில் இருக்கிறார். இதற்கிடையே கடந்த சில வருடங்களாக இங்கிலாந்தில் கவுண்டி தொடரிலும் சுதர்சன் விளையாடி வருகிறார்.

அங்கே 2023இல் சர்ரே அணிக்காக சுதர்சன் 165 ரன்களை 38.66 என்ற நல்ல சராசரியில் குவித்துள்ளார். எனவே இங்கிலாந்தில் இருக்கும் சூழ்நிலைகளை பற்றி நன்கு தெரிந்த சுதர்சன் அந்த டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று ரவி சாஸ்திரி அறிவுறுத்தியுள்ளார். மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் இங்கிலாந்தில் கம்பேக் கொடுக்கலாம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

சாஸ்திரி அறிவுரை:

“இந்த இளம் பையன் சாய் சுதர்சன் அனைத்து வகையான ஃபார்மெட்டிலும் அசத்துவார் என்று நான் பார்க்கிறேன். கிளாஸ் வீரராக தெரியும் அவர் மீது எனது கண்கள் இருக்கும். இடது கை வீரராக இங்கிலாந்தில் நிலவும் சூழ்நிலைகளில் பற்றி தெரிந்து வைத்துள்ள அவர் இங்கிலாந்தில் விளையாட வேண்டும். ஏனெனில் அவருடைய டெக்னிக், விளையாடும் விதம் ஆகியவற்றால் வெளியில் இருக்கும் அவர் அணிக்குள் வரவேண்டிய வீரர் என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க: ப்ளீஸ் அந்த பையனை ஃப்ரீயா விடுங்க.. தலையில் வச்சி கொண்டாடாதீங்க – சுனில் கவாஸ்கர் கருத்து

“ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் கம்பேக் கொடுக்கலாம். ஆனால் அவருக்கு நிறைய போட்டி இருக்கும். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அவருக்கு நிலையான இடம் உள்ளது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரைச் சுற்றி நிறைய போட்டியாளர்கள் இருக்கின்றனர்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்க உள்ளது.

Advertisement