IND vs WI : புஜாராவுக்கு பதில் அவர் தான் ஆடணும், 2 அறிமுக வீரர்களுடன் – தனது முதல் டெஸ்ட் பிளேயிங் லெவனை வெளியிட்ட ஹர்பஜன்

Harbhajan
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜூலை 12ஆம் தேதி டாமினிக்கா நகரில் துவங்குகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான முதன்மை அணி களமிறங்க உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் சுமாராக செயல்பட்ட புஜாரா, ஷமி, உமேஷ் யாதவ் போன்ற சீனியர்கள் கழற்றி விடப்பட்டு யசஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கைக்வாட், முகேஷ் குமார், நவ்தீப் சைனி போன்ற இளம் வீரர்களுக்கு இத்தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Jaiswal and Ruturaj

- Advertisement -

அந்த வகையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் சந்தித்த தோல்விகளுக்கான காரணங்களை திருத்திக் கொண்டு இத்தொடரில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கும் இந்திய அணியில் விளையாடும் 11 பேர் அணியில் புதிதாக இடம் பிடிக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. குறிப்பாக எப்படியும் ரோகித் சர்மா விளையாடுவார் என்ற நிலைமையில் மற்றொரு தொடக்க வீரர் இடத்திற்கு சுப்மன் கில், ருதுராஜ், ஜெய்ஸ்வால் ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது. அதில் சுப்மன் கில் சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரில் சதமடித்து நல்ல ஃபார்மில் இருப்பதால் தொடர்ந்து ரோகித் சர்மாவுடன் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹர்பஜன் அணி:
இருப்பினும் கழற்றி விடப்பட்ட புஜாராவுக்கு பதில் 3வது இடத்தில் விளையாடும் வாய்ப்பு ஒரு இளம் வீரருக்கு காத்திருக்கிறது. அந்த நிலையில் ரோகித் சர்மாவுடன் சமீப காலங்களில் அசத்திய கில் சந்தேகமின்றி களமிறங்க வேண்டும் என்று தெரிவிக்கும் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் புஜாராவுக்கு பதில் ஜெய்ஸ்வால் 3வது இடத்தில் விளையாட தகுதியானவர் என கூறியுள்ளார். குறிப்பாக 42 என்ற சராசரியில் ரஞ்சிக் கோப்பையில் ரன்களை குவித்துள்ள ருதுராஜை விட 81 என்ற சிறப்பான சராசரியில் இடது கை வீரராக ரன்களை குவித்துள்ள காரணத்தால் ஜெய்ஸ்வாலுக்கு அவர் ஆதரவு கொடுக்கிறார் என்று சொல்லலாம்.

Pujara-and-Jaiswal

மேலும் ஷமிக்கு பதிலாக முகேஷ் குமாரை அறிமுக வீரராக தேர்ந்தெடுத்துள்ள அவர் உமேஷ் யாதாவுக்கு பதிலாக ஜெயதேவ் உனட்கட்டை தமது அணியில் தேர்வு செய்துள்ளார். அத்துடன் விக்கெட் கீப்பராக இசானுக்கு பதிலாக தொடர்ந்து கேஎஸ் பரத்தை தேர்ந்தெடுத்துள்ள அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “என்னைப் பொறுத்த வரை ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் தொடக்க வீரர்களாகவும் ஜெய்ஸ்வால் 3வது இடத்திலும் விளையாட வேண்டும். இங்கே நிறைய பேர் ஜெய்ஸ்வால் தொடக்க வீரராகவும் கில் மிடில் ஆர்டரிலும் விளையாட வேண்டும் என்று தெரிவிக்கிறார்கள்”

- Advertisement -

“ஆனால் கில் தமக்கான இடத்தை உருவாக்கியுள்ளார். எனவே அதை மற்ற யாராலும் தொட முடியாது. அதனால் 3வது இடத்தில் நான் ஜெய்ஸ்வாலை தேர்வு செய்தேன். சிறந்த வீரரான அவர் இந்த போட்டியில் அறிமுகமாகி நிறைய ரன்கள் அடிப்பார் என்று நம்புகிறேன். அவர்களைத் தொடர்ந்து 4வது இடத்தில் விராட் கோலி 5வது இடத்தில் ரகானே ஆகியோர் விளையாடுவார்கள். அதைத்தொடர்ந்து 6வது இடத்தில் ரவீந்திர ஜடேஜா 7வது இடத்தில் கேஎஸ் பரத் அல்லது ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடுவார்கள். ஒருவேளை 7வது இடத்தில் அஸ்வின் பேட்டிங் செய்தால் 8வது இடத்தில் பரத் விளையாட சரியானவராக இருப்பார்”

“மேலும் 9வது இடத்தில் முகமது சிராஜ் மற்றும் 10வது இடத்தில் நீண்ட நாட்களாக உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தியும் பெரிய வாய்ப்புகளை பெறாத ஜெயதேவ் உனட்கட் ஆகியோர் விளையாட சரியானவர்கள். அத்துடன் 11வது இடத்தில் முகேஷ் குமார் விளையாடுவார். குறிப்பாக ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு வரும் அவருக்கு இந்திய அணியில் விளையாடுவதற்கு தாராளமாக வாய்ப்பு கொடுக்கலாம்” என்று கூறினார்.

இதையும் படிங்க:கடைசி ஓவரில் 4 விக்கெட், மாஸ் பவுலராக மாறிய ஷபாலி – குறைந்த இலக்கை வைத்தே வங்கதேசத்தை முடித்த இந்தியா

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் தேர்வு செய்து இந்திய அணி இதோ:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யசஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, அஜிங்கிய ரகானே, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், கேஎஸ் பரத், முகமது சிராஜ், ஜெயதேவ் உனக்கட், முகேஷ் குமார்.

Advertisement