- Advertisement -
இந்திய கிரிக்கெட்

என் இந்திய கேரியரை முடித்து சாதனையை உடைத்த அஸ்வின் மேல பொறாமையா? நேராக பேசிய ஹர்பஜன் – அஸ்வின்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் 2000 – 2011 வரையிலான காலகட்டங்களில் முதன்மை ஸ்பின்னராக விளையாடினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக ஹாட்ரிக் எடுத்த முதல் பவுலர் என்ற சாதனை படைத்த அவர் 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பையை வெல்ல உதவினார். அதன் பின் கொஞ்சம் தடுமாற்றமாக செயல்பட்ட அவரை அப்போதைய கேப்டன் தோனி கழற்றி விட்டார்.

அத்துடன் 2010, 2011 ஐபிஎல் கோப்பைகளை சிஎஸ்கே வெல்ல உதவிய தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இந்திய அணியிலும் தோனி வாய்ப்புகளை வழங்கினார். அந்த வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திய அஸ்வின் 2013 சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்ல உதவினார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சிறப்பாக பவுலிங் செய்த அஸ்வின் சொந்த மண்ணில் வெற்றிகளை பெற உதவினார்.

- Advertisement -

அஸ்வின் மேலே பொறாமையா:

அதனால் ஹர்பஜனை மொத்தமாக கழற்றி விட்ட இந்திய அணி அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுத்தது. அதைப் பயன்படுத்திய அஸ்வின் நாளடைவில் அபாரமாக செயல்பட்டு ஹர்பஜனை முந்தி இந்தியாவுக்காக 2வது அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராக சாதனை படைத்தார். அதன் காரணமாக அஸ்வினை அவ்வப்போது ஹர்பஜன் சிங் விமர்சித்து வந்தார்.

அதனால் இந்திய அணியில் தம்முடைய வாய்ப்பைப் பறித்து சாதனைகளை முறியடித்த அஸ்வின் மீது ஏற்பட்ட பொறாமையிலேயே ஹர்பஜன் விமர்சித்ததாக அனைவரும் கருதினார்கள். இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் யூடியூப் சேனலில் ஹர்பஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரிடம் அது பற்றி அஸ்வின் நேரடியாக பேசியது பின்வருமாறு.

- Advertisement -

நேராக உரையாடல்:

“பொறாமை சம்பந்தமான கேள்விக்கு உங்களை பதில் சொல்ல அனுமதிக்கு முன் ஒன்றை தெளிவுபடுத்துகிறேன். மக்கள் அனைவரும் அனைத்தையும் தங்கள் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். அந்த வகையில் இன்று உங்களைப் பேட்டி எடுப்பவரை நீங்கள் பொறாமைப் படுகிறீர்கள் என்று மக்கள் கருதுகிறார்கள். அது என்னவாக இருக்கும் பஜ்ஜி (ஹர்பஜன்) பா” என்று கேட்டார். அதற்கு ஹர்பஜன் கொடுத்த பதில் பின் வருமாறு.

இதையும் படிங்க: 2 பந்தில் 3 ரன்ஸ்.. ஏபிடி தலைமையில் வெ.இ அணியிடம் சோக் செய்த தெ.ஆ.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்

“உங்களைப் பார்த்து நான் பொறாமைப் படுகிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அஸ்வின். இன்று நாம் நீண்ட நேரம் பேசினோம். நான் அப்படிப்பட்டவன் என்று நினைக்கிறீர்களா?” எனக் கேட்டார். அதற்கு அஸ்வின் கொடுத்த பதில் பின்வருமாறு. “ஒரு சமயத்தில் நீங்கள் பொறாமையுடன் இருந்திருந்தாலும் அது நாளடைவில் மாறியிருக்கும் என்று நினைக்கிறேன். அதுவே என்னுடைய கருத்து. நான் தவறாகவும் எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் நாம் அனைவரும் மனிதர்கள். இப்போது வாஷிங்டன் சுந்தர் வந்ததாலேயே நான் ஓய்வு பெற்றதாக மக்கள் கருதுகிறார்கள்” என்று கூறினார்.

- Advertisement -