கனவு காணாதீங்க.. இந்தியர்கள் யாரும் அவ்வளவு ஏக்கத்தோட இல்ல.. பாகிஸ்தான் ரசிகரை கலாய்த்த ஹர்பஜன்

harbhajan singh 6
- Advertisement -

உலகின் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்க உள்ளது. கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்கும் இந்த தொடர் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் துவங்க உள்ளது. அதில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் இறுதிக்கட்டமாக தயாராகி வருகின்றனர்.

அதே போல இதுவரை சர்வதேச கிரிக்கெட்டை பார்த்த இந்திய ரசிகர்கள் கோடைகாலத்தில் ஐபிஎல் தொடரில் தங்களுக்கு மிகவும் பிடித்த அணிகளை கொண்டாடுவதற்காக தயாராக உள்ளனர். பொதுவாக ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்களுடன் நிறைய வெளிநாட்டு வீரர்கள் சேர்ந்து விளையாடுவதை பார்ப்பது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து வருகிறது.

- Advertisement -

கனவை நிறுத்துங்க:
அந்த வரிசையில் இம்முறை 20 கோடிகளுக்கும் மேல் வாங்கப்பட்ட மிட்சேல் ஸ்டார்க், பட் கமின்ஸ் போன்ற வெளிநாட்டு வீரர்கள் இந்திய வீரர்களுடன் சேர்ந்து விளையாட உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்களுடன் சேர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடுவதை பார்ப்பது இருநாட்டு ரசிகர்களின் கனவாக இருப்பதாக அந்த நாட்டைச் சேர்ந்த ஒரு ரசிகர் ட்விட்டரில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

குறிப்பாக பெங்களூரு அணியில் விராட் கோலியுடன் சேர்ந்து பாபர் அசாம் விளையாடுவதையும், மும்பை அணியில் பும்ராவுடன் சேர்ந்து ஷாஹீன் அப்ரிடியும், சென்னை அணியில் எம்எஸ் தோனியுடன் சேர்ந்து முகமது ரிஸ்வானும் விளையாடுவதையும் பார்ப்பது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்களின் வாழ்நாள் கனவு என்று அந்த ரசிகர் ட்விட்டரில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். ஆனால் அதைப் பார்த்த ஹர்பஜன் சிங் இந்திய ரசிகர்கள் யாரும் அப்படியே கனவு காண்பதில்லை நீங்களாகவே உருட்டாதீர்கள் என்ற வகையில் அந்த ரசிகருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி ட்விட்டரில் ஹர்பஜன் சிங் கூறியுள்ளது பின்வருமாறு. “எந்த இந்தியருக்கும் இது போன்ற கனவு இல்லை. எனவே நீங்கள் முதலில் இப்படி கனவு காண்பதை நிறுத்தி விட்டு கண் விழியுங்கள்” என்று அந்த பாகிஸ்தான் ரசிகருக்கு சிரித்து பதிலடி கொடுத்து கலாய்த்துள்ளார். முன்னதாக 2008இல் சாகித் அப்ரிடி, சோயப் அக்தர் போன்ற பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடினார்கள்.

இதையும் படிங்க: ரிங்கு சிங் இல்ல.. மறுபடியும் சொல்றேன் கொல்கத்தாவின் துருப்பு சீட்டு அவர் தான்.. கம்பீர் பேட்டி

இருப்பினும் சில வருடத்திலேயே எல்லை பிரச்சினை காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மிகப் பெரிய விரிசல் ஏற்பட்டது. அப்போதிலிருந்து ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடுவதற்கு பிசிசிஐ தடை விதித்தது. ஆனாலும் ஐபிஎல் நடைபெறும் போதெல்லாம் அதில் பாபர் அசாம் போன்ற தங்கள் நாட்டு வீரர்கள் 50 கோடிக்கு விலை போவார்கள் என்பது போல் பாகிஸ்தான் ரசிகர்கள் உருட்டலாக பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement