ரிங்கு சிங் இல்ல.. மறுபடியும் சொல்றேன் கொல்கத்தாவின் துருப்பு சீட்டு அவர் தான்.. கம்பீர் பேட்டி

Gautam Gambhir 4
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி துவங்க உள்ளது. அந்தத் தொடரில் கோப்பையை வெல்வதற்காக களமிறங்கும் 10 அணிகளுக்கு மத்தியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2014க்குப்பின் 10 வருடங்கள் கழித்து 3வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாட உள்ளது. இம்முறை 2012, 2014 ஆகிய வருடங்களில் கோப்பையை வென்றுக் கொடுத்த கௌதம் கம்பீர் ஆலோசகராக செயல்பட உள்ளது கொல்கத்தா அணிக்கு பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இம்முறை ஸ்ரேயாஸ் ஐயர், ஆண்ட்ரே ரசல் போன்ற முக்கிய வீரர்களை விட ரிங்கு சிங் கொல்கத்தா அணியின் துருப்புச் சீட்டு வீரராக இருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் கடந்த வருடம் குஜராத்துக்கு எதிராக போட்டியில் கடைசி 5 பந்துகளில் 5 சிக்சர்கள் அடித்து அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் தற்போது இந்தியாவுக்காகவும் அறிமுகமாகி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

கொல்கத்தாவின் துருப்புச் சீட்டு:
இந்நிலையில் 24.75 கோடி என்ற வரலாற்றின் உச்சக்கட்ட தொகைக்கு வாங்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் மிட்சேல் ஸ்டார்க் தான் இம்முறை தங்களுடைய துருப்புச் சீட்டு வீரராக இருப்பார் என்று கௌதம் கம்பீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சொல்லப்போனால் இதற்கு முன் இஷான் கிசான், சாம் கரண் போன்ற வீரர்கள் பெரிய தொகைக்கு வாங்கப்பட்டதால் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அழுத்தத்திற்கு உள்ளாகி சுமாராக செயல்பட்டனர்.

ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் ஏராளமாக விளையாடிய அனுபவத்தை கொண்ட மிட்சேல் ஸ்டார்க் அந்த அழுத்தத்தை சந்திக்க மாட்டார் என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். எனவே ஸ்டார்க் தங்களுடைய முதன்மை பவுலராக வெற்றிகளில் முக்கிய பங்காற்றுவார் என்று தெரிவிக்கும் கம்பீர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அதிகப்படியான விலைக்கு வாங்கப்பட்டது அவருக்கு அழுத்தம் ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை”

- Advertisement -

“ஆஸ்திரேலியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் வெளிப்படுத்திய அதே செயல்பாடுகளை கொல்கத்தா அணிக்காகவும் அவர் வெளிப்படுத்துவார் என்று நான் நம்புகிறேன். அவர் துருப்புச்சீட்டு வீரர் என்பதை ஏற்கனவே நான் வீரர்கள் ஏலத்தின் மேஜையில் தெரிவித்துள்ளேன். அவர் தன்னுடைய தரத்தை ஐபிஎல் தொடரில் காண்பிப்பார் என்று நான் உறுதியாகச் சொல்வேன்”

இதையும் படிங்க: ஐபிஎல் 2024 : காயத்தால் விலகிய லுங்கி நிகிடிக்கு பதிலாக.. மாஸ் ஆஸ்திரேலிய வீரரை வாங்கிய டெல்லி

“கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எனக்கு வெறும் அணியல்ல. அது ஒரு உணர்வாகும். நானும் எதிர்பார்ப்புக்கு நிகராக செயல்பட்டு கொல்கத்தா பெருமையடையும் அளவுக்கு வெற்றி பெற முயற்சி செய்வேன்” என்று கூறினார். முன்னதாக கொல்கத்தா அணியில் ஆலோசகராக கவனம் செலுத்துவதற்காக 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து கௌதம் கம்பீர் விலகியது குறிப்பிடத்தக்கது.

Advertisement