தனியாளா ஜெயிக்க முடியுமா? தங்கமான அவர விமர்சிக்காம பிசிசிஐ சேர்ந்து சப்போர்ட் கொடுக்கனும் – கவாஸ்கருக்கு ஹர்பஜன் பதிலடி

Harbhajan SIngh
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜூலை 12ஆம் தேதி துவங்குகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் கத்துக்குட்டியாகவும் பலவீனமாகவும் கருதப்படும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முழுவதுமாக இளம் அணி களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவது நிறைய ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். ஏனெனில் 2016 – 2021 வரை தொடர்ந்து இந்தியாவின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக ஜொலிக்க வைத்த விராட் கோலி சர்ச்சைக்குரிய முறையில் பதவி விலகிய பின் ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்றார்.

TEam India Rohit Sharma

- Advertisement -

ஆனால் ஆரம்பம் முதலே காயம் மற்றும் பணிச்சுமையால் பெரும்பாலும் ஓய்வெடுத்த அவர் 2022இல் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் வங்கதேச டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை. அந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவை வழி நடத்திய அவர் டாஸ் அதிர்ஷ்டத்தை சரியாக பயன்படுத்தாமல் தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினை தேர்வு செய்யாமல் சுமாராக கேப்டன்ஷிப் செய்து தோல்வியை கொடுத்தது.

ஹர்பஜன் ஆதரவு:
மேலும் ஏற்கனவே 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பையில் வெற்றியை பதிவு செய்யத் தவறிய அவர் சில வருடங்களாகவே பேட்டிங்கிலும் தடுமாற்றமாக செயல்பட்டு வருவதால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு புதிய கேப்டனை நியமிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர். குறிப்பாக 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவமிருந்தும் இந்தியாவுக்கு சுமாராகவே கேப்டன்ஷிப் செய்த ரோகித் சர்மா தமக்கு ஏமாற்றத்தை கொடுத்ததாக முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்திருந்தார்.

Rohit-and-Kohli

மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் அஸ்வினை தேர்ந்தெடுக்காதது ஏன் என்பது பற்றி தேர்வுக்குழு அவரிடம் கேள்வி கேட்காமலேயே வெஸ்ட் இண்டீஸ் தொடங்கில் கேப்டனாக நியமித்துள்ளதாகவும் கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்நிலையில் இதர வீரர்கள் சொதப்பும் போது கேப்டனால் மட்டும் வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியாது என்று அவருக்கு பதிலடி கொடுக்கும் ஹர்பஜன் சிங் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோகித் சர்மா திறமையானவர் என்பதால் ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றிய சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ரோகித் சர்மா பற்றி அனைவரும் விமர்சிப்பது சற்று அதிகம் என்று நினைக்கிறேன். ஏனெனில் அணி விளையாட்டான கிரிக்கெட்டில் ஒருவரால் உங்களுக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியாது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியா கோப்பையை வெல்லவில்லை என்பது உண்மையென்றாலும் அதையே பார்க்காமல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். ஆனால் அதற்காக ரோஹித் சர்மாவை மட்டும் ரன்கள் அடிக்கவில்லை சிறப்பாக கேப்டன்ஷிப் செய்யவில்லை என்று விமர்சிப்பது நியாயமற்றதாகும். ஏனெனில் அவர் சிறந்த கேப்டன் என்று நான் கருதுகிறேன்”

harbhajan

“சொல்லப்போனால் நானும் ரோகித் சர்மா தலைமையில் விளையாடி அவரை மிகவும் அருகில் இருந்து பார்த்துள்ளேன். மும்பை அணியில் மட்டுமல்லாமல் இந்திய அணியிலும் அனைவரையும் அவர் மிகுந்த மரியாதையுடன் வழி நடத்துவார். எனவே சமீபத்திய முடிவுகளை வைத்து அவரை குறைத்து மதிப்பிடுவது நியாயமற்றதாகும். மேலும் அவரை விமர்சிப்பதை விட்டு நாம் அனைவரும் நம்பிக்கை வைத்து ஆதரவு கொடுக்க வேண்டும். குறிப்பாக பிசிசிஐ ஆதரவு இருந்தால் உங்களால் சுதந்திரமாக செயல்பட முடியும்”

இதையும் படிங்க:TNPL 2023 : ஒரே ஓவரில் 5 சிக்சர், கடைசி பந்தில் மிரட்டிய ஈஸ்வரன், வெய்ட்டான திண்டுக்கலை சாய்த்து – நெல்லை ஃபைனல் சென்றது எப்படி

“அந்த வகையில் எம்எஸ் தோனி அல்லது விராட் கோலி மட்டுமின்றி அதற்கு முன்பாக இருந்த கேப்டன்களுக்கும் பிசிசிஐ தலைவர்கள் ஆதரவாக இருந்தனர். அதே போன்ற ஆதரவு ரோகித்துக்கும் கிடைக்க வேண்டும். தற்போது அது கிடைக்கிறதா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அந்த ஆதரவு அவருக்கு இந்தியாவை சரியான பாதையில் வழி நடத்த உதவும். எனவே இதற்கு முன்பிருந்த கேப்டன்களுக்கு கொடுத்த ஆதரவை அவருக்கும் பிசிசிஐ கொடுக்க வேண்டும்” எனக் கூறினார். அதாவது கங்குலிக்கு ஜகன்மோகன் டால்மியா, தோனிக்கு ஸ்ரீனிவாசன் ஆகிய பிசிசிஐ தலைவர்கள் ஆதரவு கொடுத்தது போல ரோகித்துக்கு தற்போதைய தலைவர் ரோஜர் பின்னி உறுதுணையாக இருக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement