அம்பயரால் தான் பாகிஸ்தான் தோத்தாங்க.. கிரேம் ஸ்மித்துடன் விவாதம் செய்து.. ஐசிசி’யை விளாசிய ஹர்பஜன்

LBW Debate
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 27ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற லீக் போட்டியில் பாகிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த தென்னாப்பிரிக்கா புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 50, சவுத் சாக்கில் 52 ரன்கள் எடுத்த உதவியுடன் 271 ரன்கள் மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அதைத் துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் ஐடன் மார்க்ரம் 91 ரன்கள் எடுத்து போராடினார். அதை வீணடிக்காமல் கடைசி நேரத்தில் கேசவ் மகராஜ் போன்ற டெயில் எண்டர்கள் தில்லான ஆட்டத்தை வெளிப்படுத்தி தென்னாப்பிரிக்காவுக்கு த்ரில் வெற்றி பெற்று கொடுத்தனர். அதனால் தொடர்ந்து 4வது தோல்வியை பதிவு செய்த பாகிஸ்தான் தொடரிலிருந்து வெளியேறுவது 90% உறுதியாகியுள்ளது.

- Advertisement -

அம்பயரால் தோல்வி:
அப்படி பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் வேன் டெர் டுஷனுக்கு நடுவர் கொடுத்த அவுட்டை 3வது நடுவர் சோதித்த போது முதல் சோதனையில் ஸ்டம்ப் மீது பந்து படவில்லை. ஆனாலும் 2வது சோதனையில் கண்கட்டி வித்தையாக பந்து ஸ்டம்ப் மீது பட்டதால் மீண்டும் அவுட் கொடுக்கப்பட்டது ரசிகர்களிடையே ஏமாற்றத்தையும் மிகப்பெரிய சர்ச்சையும் ஏற்படுத்தியது. அதை விட 10வது விக்கெட்டுக்கு தென்னாபிரிக்காவின் வெற்றிக்கு போராடிய தப்ரிஸ் சம்ஸியை எல்பிடபள்யூ முறையில் சாகின் அப்ரிடி பந்தில் பாகிஸ்தான் அவுட் கேட்ட போது நடுவர் கொடுக்கவில்லை.

அதனால் பாகிஸ்தான் ரிவியூ எடுத்த போது ஸ்டம்ப் மீது பந்து அடிக்காமல் லேசாக உரசிக்கொண்டு சென்றதன் காரணமாக களத்திலிருந்து நடுவர் கொடுத்த நாட் அவுட் தீர்ப்பை மீண்டும் 3வது நடுவர் கொடுத்தது தங்களின் வெற்றியை பறித்ததாக போட்டியின் முடிவில் கேப்டன் பாபர் அசாமே வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் “மோசமான அம்பயரிங் மற்றும் ரூல்ஸ் காரணமாக இப்போட்டியில் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது. இந்த விதிமுறையை ஐசிசி மாற்ற வேண்டும். குறிப்பாக ஸ்டம்ப் மீது பந்து பட்டால் நடுவர் அவுட் கொடுக்கிறாரா இல்லையா என்பதை தாண்டி அவுட் என்ற முடிவை அறிவுக்க வேண்டும். இல்லையென்றால் டெக்னாலஜியை பயன்படுத்துவதற்கான பயன் என்ன” என்று ஹர்பஜன்சிங் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார். அதை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த முன்னாள் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் கேப்டன் கிரேம் ஸ்மித் “அதே சமயம் நீங்கள் வேன் டெர் டுஷனுக்கு எடுக்கப்பட்ட அப்பட்டமான மோசமான தீர்ப்பை பற்றியும் யோசித்துப் பாருங்கள்” என்று பதிலளித்தார்.

இதையும் படிங்க: நாளைய இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

அதை ஏற்றுக் கொண்ட ஹர்பஜன் சிங் டுஷன் நாட் அவுட் என்றாலும் டெக்னாலஜி அவுட் கொடுத்ததாக கூறியுள்ளார். அந்த இடத்தில் டெக்னாலஜி அம்பயர்களை காப்பாற்றியதாகவும் ஹர்பஜன் விமர்சித்துள்ளார். மொத்தத்தில் ரிவியூ செய்யும் போது ஸ்டம்ப் மீது பந்து பட்டாலே நடுவரின் முடிவை பார்க்காமல் அவுட் கொடுக்க வேண்டும் என்ற விதிமுறையை கொண்டு கொண்டு வர வேண்டுமென ஹர்பஜன் விமர்சித்துள்ளார்.

Advertisement