23 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்விற்கு குட்பை சொன்ன ஹர்பஜன் சிங் – ஓய்வை அறிவித்து விடைபெற்றார்

Harbhajan
- Advertisement -

இந்திய அணிக்காக கடந்த 1998-ஆம் ஆண்டு அறிமுகமான ஹர்பஜன்சிங் இதுவரை இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 417 விக்கெட்டுகளையும், 236 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 269 விக்கெட்டுகளையும், 28 டி20 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்திய அணிக்காக இப்படி சுமார் 350 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு மேல் விளையாடிய அனுபவம் பெற்ற ஹர்பஜன் சிங் தனது 23 வருட கிரிக்கெட்டிற்கு இன்று விடை கொடுத்துள்ளார்.

சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி 2000-ஆம் ஆவது ஆண்டுகளில் ஆதிக்கம் செலுத்திய போது அந்த அணியில் முக்கிய சுழற்பந்துவீச்சாளராக ஹர்பஜன் சிங் திகழ்ந்தார். அதுமட்டுமின்றி 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணியிலும், 2011ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் ஹர்பஜன் சிங் இடம் பெற்றிருந்தார். தனது கிரிக்கெட் கரியரில் சிறப்பான பல ஆட்டங்களை எதிர்கொண்ட ஹர்பஜன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மிக இளம் வயதிலேயே ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இப்படி ஒரு சிறப்பான பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங்கிற்கு கடந்த 2015ஆம் ஆண்டிற்கு பின்னர் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தது. ஆனாலும் அவர் ஓய்வை அறிவிக்காமல் ஐபிஎல் தொடர்களில் விளையாடி வந்தார். கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக ஏலம் எடுக்கப்பட்ட அவர் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையில் இந்த ஆண்டு எந்த அணியிலும் தேர்வாக மாட்டார் என்று கூறப்பட்டது.

ஏனெனில் தற்போது 41 வயதாகும் அவரை இனியும் எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன் வராது என்பதை புரிந்து கொண்ட அவர் பயிற்சியாளராக மாறவும் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் இன்று தனது ஓய்வை முறைப்படி அறிவித்த ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : அனைத்து விடயங்களுக்கும் ஒரு நல்ல முடிவு இருக்கும். அந்த வகையில் இன்று என்னுடைய 23 வருட கிரிக்கெட்டிற்கு நான் விடை கொடுக்கிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணியை வீழ்த்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு முக்கிய வீரரை சேர்த்த தெ.ஆ – திட்டம் என்ன?

இந்த 23 வருட கிரிக்கெட் பயணத்தில் எனக்கு கிடைத்த அருமையான தருணங்கள் மற்றும் மறக்க முடியாத ஞாபகங்கள் அனைத்திற்கும், அதனை வழங்கிய அனைவருக்கும் நன்றி என்று தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை அவர் நெகிழ வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement