இந்திய அணியை வீழ்த்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு முக்கிய வீரரை சேர்த்த தெ.ஆ – திட்டம் என்ன?

Olivier
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியதே இல்லை என்பதால் இம்முறை தொடரை கைப்பற்ற இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. அதுமட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாகவே அயல்நாட்டில் இந்திய அணி வெற்றிகளை குவித்து வருவதால் நிச்சயம் இந்த தென்னாப்பிரிக்க தொடரை நிச்சயம் இந்திய அணி கைப்பற்றும் என்று பல்வேறு நிபுணர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

olivier 2

- Advertisement -

அதே வகையில் கடந்த முறை இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சென்றிருந்தபோது அந்த அணியில் விளையாடிய பல ஜாம்பவான்கள் தற்போது அணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் இந்திய அணிக்கு எளிதில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறியுள்ளனர். இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்காக 2017 ஆம் ஆண்டு அறிமுகமாகி 10 போட்டிகளில் விளையாடி விட்டு இங்கிலாந்து கவுண்டிக்கு சென்ற வீரரை மீண்டும் தென் ஆப்பிரிக்க அணி தங்கள் அணிக்கு அழைத்துள்ளது.

அதன்படி மீண்டும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தென் ஆப்பிரிக்க சர்வதேச அணியில் இணைந்துள்ள ஆலிவர் இந்த இந்தியா டெஸ்ட் தொடர் குறித்து தனது கருத்தினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Olivier 1

இந்த தொடரானது என்னுடைய கரியரில் மிக முக்கியமான தொடர். ஏனெனில் உலகத்தரம் வாய்ந்த இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்து வீசுவது சிறப்பான ஒன்று. விராட் கோலிக்கு எதிராக பந்து வீச நான் தயாராக இருக்கிறேன். தற்போதைய 4 கிரிக்கெட் வீரர்களில் முக்கியமான வீரரான அவரை வீழ்த்தவும் நான் திட்டம் வைத்துள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : சவாலுக்கு நாங்க தயார். முதல் போட்டிக்கு முன்னர் வாய் ஜெவடால் விட்ட புஜாரா – இதெல்லாம் தேவைதானா?

மேலும் நாங்கள் எங்களுடைய சொந்த மைதானத்தில் விளையாடுவதால் எங்களுக்கு அதில் ஒரு கூடுதல் அனுகூலம் இருக்கிறது. இங்கு உள்ள மைதானங்கள் அனைத்தும் நல்ல பவுன்ஸ் மற்றும் வேகம் கிடைக்கும் என்பதனால் நிச்சயம் எங்களது பந்து வீச்சாளர்கள் இங்கு சிறப்பாக செயல்பட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement