திடீர்னு அஸ்வின் இந்திய அணிக்குள் ஏன் கொண்டு வறீங்க.. என்னால் புரிஞ்சுக்க முடியல.. தமிழக வீரர்களுக்கு ஹர்பஜன் கடும் எதிர்ப்பு

harbhajan Singh
- Advertisement -

ஆசிய கண்டத்தின் புதிய சாம்பியனாக இலங்கையை தோற்கடித்து வெற்றி வாகை சூடிய இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்குகிறது. அதில் பணிச்சுமையை கருத்தில் கொண்டு விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது.

ஏனெனில் வாஷிங்டன் சுந்தர் சமீப காலங்களாகவே காயத்தை சந்தித்திருந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 2022 ஜனவரிக்கு பின் ஒருநாள் போட்டிகளில் கழற்றி விடப்பட்டார். சொல்லப்போனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் எடுத்த போதிலும் சமீபத்திய 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியாயமின்றி கழற்றி விடப்பட்ட அவருடைய வெள்ளைப்பந்து கேரியர் முடிந்ததாகவே அனைவரும் நினைத்தனர்.

- Advertisement -

ஹர்பஜன் எதிர்ப்பு:
இருப்பினும் அக்சர் படேல் காயமடைந்துள்ள நிலையில் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகிய இருவருமே இடது கை அல்லது லெக் ஸ்பின்னர்களாக இருக்கிறார்கள். எனவே எதிரணியில் இருக்கும் இடது கை பேட்ஸ்மேன்களை திணறடிக்க ஆஃப் ஸ்பின்னர் தேவை என்ற கண்ணோட்டத்துடன் ஆஸ்திரேலிய தொடர் மட்டுமல்லாமல் உலகக் கோப்பை தொடரிலும் சுந்தர் மற்றும் அஸ்வின் ரிசர்வ் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சஹால் போன்றவர் காத்திருக்கும் நிலையில் திடீரென அஸ்வின், சுந்தர் அணிக்குள் கொண்டு வரப்படுவதற்கான காரணத்தை தம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என ஹர்பஜன் சிங் எதிர்ப்பு தெரிவித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “முதலில் ஆசிய கோப்பை அணியில் இடம் பெறாத வாஷிங்டன் சுந்தர் கடைசி நேரத்தில் அழைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அஸ்வின் 2வது வீரராக இந்த தொடரில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்”

- Advertisement -

“எனவே இந்திய அணி நிர்வாகம் ஆஃப் ஸ்பின்னர்களை தேடுவது தெரிகிறது. மேலும் இதிலிருந்து எதிரணியின் இடது கை பேட்ஸ்மேன்களை திணறடிக்கக்கூடிய ஆஃப் ஸ்பின்னரை தேர்வு செய்ய தவறி விட்டோம் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள் என்பதும் தெரிகிறது. ஆனால் அதற்காக இவற்றை ஏன் தேவையில்லாமல் கடந்து செல்ல வேண்டும்? இந்த முடிவு என்னுடைய புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. அல்லது அவர்கள் தங்களுடைய தவறை சரி செய்ய மற்றொரு தவறு செய்யப் போகிறார்கள் என்பது போல் இருக்கிறது”

இதையும் படிங்க: சச்சினை காப்பாத்துறதுக்காக இதை செய்றீங்களா.. பிசிசிஐ – அஜித் அகர்கரை விளாசும் விராட் கோலி ரசிகர்கள்.. காரணம் இதோ

“ஏனெனில் நீங்கள் ஒரு அணியில் 3 ஸ்பின்னர்களை தேர்வு செய்ய முடியாது. மேலும் ரவீந்திர ஜடேஜா நிச்சயமாக விளையாடுவார்கள் என்ற நிலைமையில் குல்தீப் மற்றொரு ஸ்பின்னராக இருப்பார். ஆனால் இப்போது 2 ஆஃப் ஸ்பின்னர்களை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்கள். அதில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு உலகக் கோப்பை அணியிலும் வாய்ப்பு கொடுக்க தயாராகியுள்ளீர்கள்” என்று கூறினார்.

Advertisement