தெ.ஆ டெஸ்ட் தொடரில் இந்தியா சாதிக்க அவர் தான் கீப்பரா இருக்கணும்.. ஹர்பஜன் சிங் கருத்து

Harbhajan Singh 5
- Advertisement -

சொந்த மண்ணில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட அடுத்தடுத்த கிரிக்கெட் தொடர்களில் விளையாட உள்ளது. அதில் கடைசியாக நடைபெற உள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறுகிறது.

மேலும் இதற்கு முன் தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் இந்தியா ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லை. எனவே இம்முறை அந்த மோசமான வரலாற்றை மாற்றுவதற்காக ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, ஷமி, பும்ரா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அடங்கிய வலுவான இந்திய அணி களமிறங்க உள்ளது.

- Advertisement -

விக்கெட் கீப்பர்:
முன்னதாக இத்தொடரில் ரிசப் பண்ட் இன்னும் காயத்திலிருந்து குணமடையாததால் கேஎல் ராகுல் அல்லது இஷான் கிசான் ஆகியோரில் விக்கெட் கீப்பராக களமிறங்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதில் நடைபெற்று முடிந்த 2023 உலக கோப்பையில் மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பராக விளையாடிய கேஎல் ராகுல் அபாரமாக செயல்பட்டு இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 நாட்கள் விக்கெட் கீப்பராக விளையாடுவது மிகவும் கடினம் என்பதால் அவர் இத்தொடரில் கீப்பிங் செய்யாமல் சாதாரண பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த சூழ்நிலையில் கடந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் விக்கெட் கீப்பராக விளையாடி அசத்திய இசான் கிசான் இந்த தென்னாப்பிரிக்க தொடரிலும் கீப்பிங் செய்வார் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இத்தொடரில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டால் மட்டுமே இந்தியா வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “தென் ஆப்பிரிக்காவில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்படுவதை நான் பார்க்க விரும்புகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் கீப்பிங் செய்வதற்கு அவர் நிறைய ஆர்வத்தை காட்டுவார் என்று நான் நினைக்கவில்லை”

இதையும் படிங்க: தெ.ஆ மண்ணில் சரித்திரம் படைக்க அதை மட்டும் செய்ங்க.. மீதியை பவுலர்ஸ் பாத்துப்பாங்க.. ஹர்பஜன் அட்வைஸ்

“ஆனால் அணிக்காக செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட சூழ்நிலைகளில் அவர் அந்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். தற்போதைய நிலைமையில் இசான் கிசான் இத்தொடரில் முழுமையான விக்கெட் கீப்பராகவும் ராகுல் பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடுவதற்கு வாய்ப்புகள் தெரிகிறது. இருப்பினும் வெற்றி பெறுவதற்கு நான் ஒரு சிறந்த விக்கெட் கீப்பரை தேர்வு செய்ய வேண்டுமெனில் அது ராகுலாக இருப்பார்” என்று கூறினார். அவர் கூறுவது போல ராகுல் கீப்பராக செயல்படுவது ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் அல்லது பவுலரை விளையாடுவதற்கான வழியை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement