வீடியோ : உடைந்த கையுடன் ரிவர்ஸ் பவுண்டரி அடித்த விஹாரி – காயத்துடன் விளையாடிய காரணம் பற்றி பேசியது இதோ

hanuma vihari
- Advertisement -

இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடர்பான ரஞ்சிக் கோப்பையின் 2022 – 23 சீசன் லீக் சுற்று முடிந்து நாக் அவுட் சுற்று தொடங்கியுள்ளன. அதில் ஜனவரி 31ஆம் தேதியன்று துவங்கிய 3வது காலிறுதிப் போட்டியில் மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேசம் அணிகள் மோதின. இந்தூரில் துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற மத்திய பிரதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆந்திர பிரதேசம் 379 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரிக்கி புய் சதமடித்து 149 (250) ரன்களும் கரண் சிண்டே 110 (264) ரன்களும் எடுத்தனர்.

மத்திய பிரதேசம் சார்பில் அதிகபட்சமாக அனுபவ் அகர்வால் 4 விக்கெட் எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய மத்திய பிரதேசம் ஆந்திர பிரதேசத்தின் சிறப்பான பந்து வீச்சில் முதல் இன்னிங்சில் 228 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சுபம் சர்மா 51 ரன்கள் எடுத்த நிலையில் ஆந்திர பிரதேசம் சார்பில் அதிகபட்சமாக பிரித்வி ராஜ் 5 விக்கெட்களை சாய்த்தார். அதனால் 151 ரன்கள் முன்னிலை பெற்ற ஆந்திர பிரதேசம் வெற்றியை கையில் வைத்திருந்தாலும் 2வது இன்னிங்ஸில் மத்திய பிரதேசத்தின் மாயாஜால பந்து வீச்சில் முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் இழந்து தடுமாறியது.

- Advertisement -

போராடிய விஹாரி:
குறிப்பாக ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 76/9 என மொத்தமாக சரிந்த ஆந்திராவுக்கு ஏற்கனவே ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த போது காயத்தை சந்தித்த ஹனுமா விகாரி வேறு வழியின்றி கடைசி பேட்ஸ்மேனாக களமிறங்கினார். வலது கை பேட்ஸ்மேனான அவர் தனது வலது கையில் காயத்தை சந்தித்த நிலையில் அதற்கான முதலுதவிகளை எடுத்துக்கொண்டு மேற்கொண்டு காயத்தை சந்திக்காமல் இருக்க இடது கை பேட்ஸ்மேனாக களமிறங்கி மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டார். அப்படி அர்ப்பணிப்புடன் களமிறங்கிய அவரது செயல் தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட வீரர்கள் மற்றும் ரசிகர்களின் நெஞ்சங்களை தொட்டு பாராட்ட வைத்தது.

தொடர்ந்து பேட்டிங் செய்த அவர் ஒரு பந்தை சரியான நேரத்தில் திரும்பி இடது கையை மட்டும் பயன்படுத்தி ஒற்றை கையால் ரிவர்ஸ் ஸ்லாக் ஸ்வீப் ஷாட்டை அடித்து ரசிகர்களை மேலும் வியப்பில் ஆழ்த்தினார். அதை பார்த்த ரசிகர்களுக்கு அதே நாளில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வீரர் மொயின் அலி அதே போன்ற ஷாட்டை காயம் இல்லாமலேயே ஒற்றை கையால் அடிக்கும் முயற்சி தோல்வியடைந்தது நினைவுக்கு வந்தது. அந்த வகையில் அந்த ஷாட்டை எப்படி அடிக்க வேண்டும் என்று மொயின் அலி இவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என மனதார பாராட்டினார்கள்.

- Advertisement -

அப்படி காயத்துடன் பேட்டிங் செய்த அவர் 3 பவுண்டரியுடன் 15 (16) ரன்கள் எடுத்து அவுட்டானதால் ஆந்திர பிரதேசம் 93 ரன்களுக்கு அவுட்டானது. மத்திய பிரதேசம் சார்பில் அதிகபட்சமாக ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 245 என்ற இலக்குடன் விளையாடி வரும் மத்திய பிரதேசம் 3வது நாள் முடிவில் 58/9 என்ற நிலையுடன் விளையாடி வருகிறது. இந்நிலையில் காயமடைந்தாலும் 10 – 15 ரன்களை எக்ஸ்ட்ரா எடுத்தால் கூட அது வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற காரணத்தாலேயே மருத்துவர்கள் பேச்சையும் தாண்டி விளையாடியதாக ஹனுமா விகாரி தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய கை முழுமையாக காயமடைந்துள்ளது. குறிப்பாக முன்னங்கையில் காயம் ஏற்பட்டதால் விளையாட வேண்டாம் என்று மருத்துவர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் எங்களது அணியில் விக்கெட்டுகள் விழுந்ததால் நாம் ஏன் இடது கையில் மட்டும் பேட்டிங் செய்யக்கூடாது என்று நினைத்தேன். குறிப்பாக 10 – 15 பந்துகளை எதிர்கொண்டு எக்ஸ்ட்ரா 10 ரன்கள் எடுத்தால் அது வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதை யார் அறிவார். மேலும் கேப்டனாக இதர வீரர்களுக்கு முன்னோடியாக இருப்பது எனது கடமையாகும்”

இதையும் படிங்க: வீடியோ : இது என்ன லோக்கல் கிரிக்கெட்டா? மொய்ன் அலியின் ஷாட்டை காலாய்த்த நியூசி வீரர் – ரசிகர்கள் வியப்பு

“ஒருவேளை அந்த இடத்தில் நான் களமிறங்காமல் போனால் அது இதர வீரர்களின் உத்வேகத்தை குறைத்து விடும். ஒருவேளை காயத்துடன் களமிறங்கி முதல் பந்திலேயே அவுட்டானாலும் பரவாயில்லை. ஆனால் அது இதர வீரர்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும்” என்று கூறினார்.

Advertisement